வெள்ளி, 28 ஏப்ரல், 2017

குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக அதிமுக, பிஜு ஜனதா தள் உடைப்பு?.

Marx Anthonisamy : உ.பியில் பெரு வெற்றி அடைந்த பின்னும்
கூட நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெறுவதில் சிக்கல் உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தொகுதியில் உள்ள மொத்த வாக்குகள் 10,98,882. வெற்றி பெறத் தேவையான வாக்குகள் 5,49,442. எனவே பா.ஜ.க வெற்றி பெற அதற்கு இன்னும் 24,552 வாக்குகள் தேவைப்படுகின்றன.
மோடி - அமித்ஷா கும்பல் இந்த 24,552 வாக்குகளை 'வாங்கு'வதற்கு தொலை நோக்குடம் பிளவு வேலைகளைச் செய்து வருகிறது. பிஜு ஜனதா தளத்தை உடைக்க அவர்கள் செய்துவரும் சதி குறித்து அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் கொரடா புலம்பியுள்ளதை நான் ஏற்கனவே இங்கு பதிவிட்டுள்ளேன். சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியும் குறி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இங்கே அதிமுகவை உஅடைத்து நொறுக்க மோடி- அமித்ஷா கும்பல் செய்யும் முயற்சியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதிமுக "இணைப்பு" முயற்சிகள் ஒரு நாடகம் என்பது அப்போதே அறிந்த ஒன்றுதான். ஓ.பி.எஸ் தரப்பு இணைப்பிற்கு நிபந்தனையாக பாஜக ஆதரவு என்பதைப் பிடித்துத் தொங்கியது இங்கே கவனத்துக்குரிய ஒன்று.
தவிரவும் ராஜ்ய சபாவில் தொங்கிக் கொண்டிருக்கும் சட்டங்களை நிறைவேற்ரவும் இவர்களுக்கு அதிமுக உடைப்பு தேவைப்படுகிறது.
எல்லாவற்றைக் காட்டிலும் திராவிடக் கட்சிகளைப் படிப்படியாகச் சிதைக்க மோடி-அமித்ஷா கும்பலுக்கு அதிமுக அழிப்ப்ய் தேவைப்படுகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான விவரங்களுக்குப் பார்க்க:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக