செவ்வாய், 4 ஏப்ரல், 2017

பொன்.ராதாகிருஷ்ணன் : இந்தி மாநில ஓட்டுனர்களுக்கு வசதியாகத்தான் இந்தி மைல்கல் ..

வங்காளம், தமிழ்நாடு பஞ்சாப்,ஓடிஸா,மராட்டியம் , ஆந்திரம், கன்னடம், கேரளம் ,அஸ்ஸாம் எல்லாம் என்ன பாவம் பண்ணின?
வடமாநில ஓட்டுனர்களுக்கு உதவவே மைல் கற்களில் இந்தி - சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழகத்தில் நெடுஞ்சாலை மைல்கற்களில் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியில் எழுதப்படுவது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்துப் பேசிய அவர், வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகன ஓட்டுனர்களுக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தினால் தான் இந்தியில் எழுதப்படுகிறது. அத்துடன் நெடுஞ்சாலை மைல்கற்களில் இந்தியில் எழுத வேண்டும் என்று எடுக்கப்பட்ட முடிவு தி.மு.கவின் டி.ஆர்.பாலு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது எடுக்கப்பட்டது என்று கூறினார். ஒடிசா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து வரும் வாகன ஓட்டுனர்களுக்கு இந்தி தெரியாத நிலையில் பொதுவான மொழியான ஆங்கிலத்தை அகற்றுவது ஏன் என்ற கேள்விக்கு பொன்.ராதாகிருஷ்ணன் முறையாக பதில் அளிக்கவில்லை.  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக