வெள்ளி, 28 ஏப்ரல், 2017

எடப்பாடி பழனிச்சாமியை சேலத்தில் முடக்குவது யார் ? ஏன்? பின்னணியில் எந்த சக்தீ?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த ஊரான சேலத்திற்கு நேற்று வருகை தந்தார். இன்று அரசுத்துறை அதிகாரிகளோடு வறட்சி சம்மந்தமான ஒரு கூட்டத்தை மட்டும் நடத்தினார். நாளை அவர் படித்த பள்ளியான ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் உள்ள வாசகி கல்லூரியின் பொன்விழா நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார். இந்த இரண்டு நிகழ்ச்சிகள்தான் வேறு எதுவும் அதிகாரப்பூர்வமாக நிகழ்ச்சிகள் உள்ளதாக தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஒரு வாரம் சேலத்திலேயே தங்கியிருக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அநேகமாக ஞாயிறு அல்லது திங்கள் கூட அவர் சென்னை கிளம்பக் கூடும் என தெரிகிறது.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள இரண்டு அணி இணைப்பு விவகாரம், அதில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள், அடுத்து தினகரன் கைது, போலீஸ் காவல் விசாரணை என்ற அரசியல் பரபரப்புகள் தமிழகத்தில் தொற்றி நிற்கிறது. ஆனால், சென்னையில் இருந்து ஆட்சிப் பணியை செய்ய வேண்டிய முதல் அமைச்சர் பழனிச்சாமி திடீரென நேற்று சேலத்திற்கு வந்துவிட்டார். எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் தங்கியிருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்புவதாக அதிமுக எம்எல்ஏக்களே கூறுகிறார்கள்.


இவரை பின்னாலில் இருந்து ஒரு சக்தி இயக்கிக்கொண்டிருப்பது மட்டும் தெரிகிறது. சென்னையில் இருந்து ஆட்சி நிர்வாகத்தை கவனிப்பதோடு, இரண்டு அணி இணைப்பு நிகழ்ச்சியை துரிதுப்படுத்துவதைவிட்டுவிட்டு என்ன காரணத்திற்காக இங்கு அவர் ஒருவார காலம் முகாமிட உள்ளார் என அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளே கேள்வி எழுப்புகின்றனர். மர்மங்களும், மாற்றங்களும் இந்த ஒரு வாரத்தில் நிகழப்போகிறதோ, என்னவோ. ஜீவா தங்கவேல். நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக