வியாழன், 13 ஏப்ரல், 2017

எம்.எஸ்.சாமிநாதன் :கடன் தள்ளுபடி மட்டும் போதாது : ஆதார விலையே தீர்வு!


கடன் தள்ளுபடி மட்டும் போதாது : ஆதார விலையே தீர்வு!விவசாயக் கடனை தள்ளுபடி செய்வதைவிட, குறைந்தபட்ச ஆதார விலை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதே விவசாயிகளுக்கு நீண்டகாலப் பயன் வழங்கும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரான எம்.எஸ்.சுவாமிநாதன் கூறுகையில், ‘வறட்சி உள்ளிட்ட பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள், தங்களது விவசாயக் கடனை தள்ளுபடி செய்யவேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் இந்த குறுகியகால பிரச்னைகளைத் தீர்க்க உடனடி உதவி அவசியம். ஆனால் நீண்டகாலக் கொள்கைகள் வகுத்து விவசாயத்தை பொருளாதாரரீதியில் வலுவானதாகவும் நிலையானதாகவும் உருவாக்குவதே மிக முக்கியமாகும்.

நான் தலைமை வகித்த தேசிய விவசாய ஆணையமானது, உற்பத்திச் செலவுடன் 50 சதவிகித விலை கோரும் கொள்முதல் மற்றும் விலை நிர்ணயத் திட்டத்தை பரிந்துரை செய்தது. இதன்மூலம் விவசாயிகளுக்கு பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சிரமங்களைச் சமாளிக்க போதிய நிதியாதாரம் கிடைக்கும். மேலும் பயிர் வளர்ச்சியைப் பாதிக்கும் காரணிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் மிகவும் முக்கியமானதாகும்’ என்று கூறினார்  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக