வெள்ளி, 14 ஏப்ரல், 2017

பாடகர் டி.எம்,கிருஷ்ணா : குழந்தை பிறக்கும்போதே சாதீய படிநிலை ஆரம்பம் ..இது ஒரு சிந்தனை ஊழல் !

தமிழகத்தில் நிலவும் சூழலுக்கு பாஜக-தான் காரணம் : பாடகர்  ...
தமிழகத்தில் தற்போது நிகழும் அசாதாரண சூழ்நிலைக்கு பாஜக-வும் ஒரு காரணம் என, பிரபல பாடகர் டி.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூரிலுள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் டி.எம்.கிருஷ்ணா இசைக் கச்சேரி நடைபெற்றது. பிறகு, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கிருஷ்ணா, 'தற்போதைய நிலையில் திராவிடக் கட்சிகள் தங்களது கொள்கையை மறந்து செயல்படுகின்றன. ஊழலும் தலைவிரித்தாடுகிறது. ஊழல் என்றால் ஆர்.கே.நகரில் நடைபெற்ற ஊழலைப்போல பணத்தில் மட்டுமே செய்வது அல்ல- அது ஒரு சிந்தனை. தற்போது சாதியிலும், மதத்திலும் ஊழல் செய்கின்றனர். குழந்தை பிறக்கும்போதிருந்தே அதன் சாதியப் படிநிலை ஆரம்பமாகிறது. தற்போது தமிழத்தில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலைக்கு பாஜக-வும் ஒரு காரணம்' என்று தெரிவித்தார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக