சனி, 15 ஏப்ரல், 2017

உச்சநீதிமன்றில் வழக்கு ...இந்தி கட்டாயப்பாடம்... அடுத்த வாரம் விசாரணைக்கு ,, .

இந்தி கட்டாயப்பாடம்:  உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம்  ...
பாஜக மூத்தத் தலைவர் அஸ்வின்குமார் உபாத்யாயா, ‘நாடு முழுவதும் இந்தி மொழியை பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை கட்டாயப்பாடமாக்க வேண்டும்’ என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல மொழிகள் பேசுகிற மக்கள் வாழும் இந்தியாவில் மும்மொழி கொள்கையின் அடிப்படையில் இந்தி மொழியை பள்ளிகளில் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற கருத்து அதிகாரத்துக்கு வரும் ஆட்சியாளர்கள் தரப்பினரால் அவ்வப்போது ஒரு கோரிக்கையாக எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த மும்மொழி கொள்கை எல்லா மாநிலத்திலும் கடைபிடிக்கப்படுவதில்லை. இந்தப் பிரச்னை எழுகிறபோது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தி மொழியை மத்திய அரசின் அலுவல் மொழியாக மட்டுமே குறிப்பிடுகிறதே தவிர, தேசிய மொழியாக குறிப்பிடவில்லை என்று நீதிமன்றங்கள் விளக்கம் அளித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக