திங்கள், 17 ஏப்ரல், 2017

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் ... தேர்தல் அதிகாரிகள் தினகரன் வசமாக சிக்குகிறார்கள்

இரட்டை இலை விவகாரம்: விசாரணை வளையத்துக்குள் தேர்தல் அதிகாரிகள் இந்திய தலைமைத்தேர்தல் ஆணையத்தின் முன்னாள் துணை தேர்தல் அதிகாரி பவன் ரெய்னா, தற்போதைய அதிகாரி சந்திப்சக்சேனா இருவரும் மத்திய அரசின் விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்துள்ளதாக கூறப்பட்ட விவகாரத்தில் பவன் ரெய்னா சிக்க வாய்ப்பிருப்பதாகவும், அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. முதல்வராக இருந்த ஜெ, டெல்லி சென்றிருந்தபோது அவருக்கும் எல்லாமுமாக இருந்தவர் பவன் ரெய்னா. தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்த இவர் தற்போது ஓய்வுபெற்றுவிட்டார். ஓ.பி.எஸ்.சுக்கும் நெருக்கமாக இருந்தவர் பவன் ரெய்னா.நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக