ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

அய்யாக்கண்ணு :கோரிக்கைகளை நிறைவேற்றினால் போராட்டத்தைக் கைவிடுவோம்

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று டெல்லியில் போராடிவரும் விவசாயிகளை நேரில் சந்தித்துப் பேசினார். அவருடன் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை இருந்தார். முன்னதாக முதல்வரிடம் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், முதல்வர் பிரதமர் மோடியைச் சந்தித்து எங்களது கோரிக்கைகளை எடுத்துரைப்பதாக உறுதியளித்துள்ளார். பிரதமர் மோடி எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தால் போராட்டத்தைக் கைவிடுவதாக முடிவெடுத்துள்ளோம் என தெரிவித்தார். தமிழக விவசாயிகள் டெல்லியில் 41 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருவது குறிப்பிடத்தக்கது.  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக