திங்கள், 24 ஏப்ரல், 2017

ஜெயாவின் கொடைநாடு எஸ்டேட் காவலாளி அடித்து கொலை ! மாபியா கஜானா வெடிக்கிறது?

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. By: Mathi l ஊட்டி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு காவலாளி கிஷண்பகதூர் என்பவர் படுகாயங்களுடன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் அண்மையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டபோது இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்பட்டது. இச்சம்பவம் நிகழ்ந்த சில நாட்களிலேயே ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றொரு காவலாளி கிஷண்பகதூர் என்பவர் படுகாயங்களுடன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடநாடு எஸ்டேட்டில் முக்கியமான ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம். அந்த ஆவணங்களை அபகரிக்க முயன்றபோது இந்த சம்பவங்கள் நிகழ்ந்ததா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக