வியாழன், 27 ஏப்ரல், 2017

சைதாப்பேட்டையில் தாய், மகள் படுகொலை

சைதாப்பேட்டை : சைதாப்பேட்டையில் தாய், மகள் படுகொலை செய்யப்பட்டனர். சென்னை, சைதாப்பேட்டை, கே.பி.கோவில் தெருவில், அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சண்முகம். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர் மனைவி ஹேமலதா, 47; அண்ணா பல்கலையில் பேராசிரியர் மற்றும் அறிவியலாளராக பணியாற்றி வந்தார். இவர் மகள் ஜெயலட்சுமி, 21; அண்ணா பல்கலையில், பி.இ., சிவில் படித்து வந்தார். இந்நிலையில், இருவரும் வீட்டிற்குள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். நேற்று இரவு, 7:00 மணிக்கு, அவரது வீட்டிற்கு உறவினர்கள் வந்து பார்த்த போது, தாய், மகள் கழுத்தறுக்கப்பட்டு இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடல்களை கைப்பற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான காரணம்அடுக்கு மாடி குடியிருப்பில் தாய், மகள் இருவரும் கொலை செய்யப்பட்டதற்கு, முன்விரோதம் காரணமாக அல்லது நகை, பணத்தை அபகரிக்க கொலை செய்யப்பட்டனரா என போலீசார் விசாரிக்கின்றனர். ஹேமலதாவின் மகன் தலைமறைவானதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதே பகுதியில் குடியிருப்புகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள், போலீசாரால் ஆராயப்படுகின்றன.  dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக