செவ்வாய், 11 ஏப்ரல், 2017

மாலைதீவு மருத்துவ மாணவி வங்காளதேசத்தில் கொலை.. இவர் ஒரு மாடல் அழகியுமாவார்

3ECD5A8300000578-4367224-The_model_s_far_left_fame_grew_and_she_eventually_landed_on_the_-a-27_1490947539185  கவர்ச்சியான ஆடை அணிந்ததற்காக  கொலை செய்யப்பட்ட  மொடல் அழகி!! 3ECD5A8300000578 4367224 The model s far left fame grew and she eventually landed on the  a 27 1490947539185A Vogue model has been found dead in a room of a hostel dormitory in Bangladesh. Police recovered the body of Raudha Athif, a 21-year-old medical student from the Maldives, at noon on Wednesday and her death is being treated as a suicide. An hour earlier some of her classmates living in the same building discovered Ms Athif.
கவர்ச்சியான ஆடை அணிந்ததற்காக மொடல் அழகியான தங்களது மகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலைத்தீவை சேர்ந்த Raudha Athif(21) என்ற இளம்பெண் பல்வேறு அழகி போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்துள்ளார்.
இவரது வெற்றிகளையும் அழகானத் தோற்றத்தையும் மாலைத்தீவு அதிபரும் வெகுவாக பாராட்டியுள்ளார்.
இதுமட்டுமில்லாமல், இந்தியாவில் வெளியாகும் வோக் பத்திரிகையின் அட்டைப்படத்திலும் இவர் இடம்பெற்று சர்வதேச புகழைப் பெற்றார்.
மொடல் அழகியான இவர் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள Islami Bank மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்தவாரம் புதன்கிழமை அன்று அறையில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.மாலைத்தீவில் உள்ள இவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இது தற்கொலை இல்லை என்றும் இது திட்டமிடப்பட்ட கொலை என பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து பெற்றோர் வெளியிட்ட தகவலில் ‘தற்கொலை செய்துக்கொள்ளும் அளவிற்கு எங்களது மகள் கோழை இல்லை.
இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவரான அவர் கவர்ச்சி உடைகளை அணிந்துக்கொண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
கவர்ச்சியான ஆடை அணிந்ததற்காக  கொலை செய்யப்பட்ட  மொடல் அழகி!!இதுபோன்ற ஆடைகளை அணியக் கூடாது என மிரட்டியவர்கள் தான் எங்களது மகளை கொலை செய்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தற்கொலையாக காணப்பட வேண்டும் எனவும் சம்பவங்களை ஜோடித்துள்ளனர் என பெற்றோர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
பெற்றோரின் தகவல்களை சேகரித்துள்ள பொலிசார் அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக