செவ்வாய், 11 ஏப்ரல், 2017

அமைச்சர் விஜயபாஸ்கரின் கல் குவாரியில் மீண்டும் சோதனை

விஜயபாஸ்கரின் கல் குவாரியில் மீண்டும் சோதனை!
புதுக்கோட்டை மாவட்டம், திருவேங்கை வாசலில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான கல் குவாரியில், மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (இன்று) காலை முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
திங்கள்கிழமை (நேற்று) சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமார் ஆகியோர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
விஜயபாஸ்கரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சரத்குமாரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை நடந்த அதேநேரத்தில், விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்டவர்களின் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையை நடத்தினர். ஏற்கெனவே, புதுக்கோட்டை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் அவரின் உதவியாளர்கள், உறவினர்கள் ஆகியோர் தங்கியிருந்த இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.ஜெயலலிதா  அதிமுகவையும் ஆட்சியையும் என்ன ஷேப்பில் விட்டு வைத்து விட்டு போயுள்ளார் என்பது இனியாவது மக்களுக்கு புரியவேண்டும் .இவரா அம்மா? இவரா  புரட்சி தலைவி? தேவதை?   இவரா  மாதர்குல மாணிக்கம்?

தற்போது, விஜயபாஸ்கருக்குச் சொந்தமான கல் குவாரியிலும் மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகள் காலை முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர், 15 ஆண்டுகளாக இந்தக் குவாரியை நடத்தி வருகிறார். அங்கு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு ஜல்லிக் கற்களாக அனுப்பப்படுகிறது. இந்த குவாரியில் 100க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகிறார்கள்.
கடந்த 7ஆம் தேதி வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணத்தில் விதியை மீறி குவாரியில் கற்கள் வெட்டி எடுக்கப்படுவது தெரியவந்தது. அதுபற்றி மத்திய பொதுப்பணித் துறைக்கு அறிக்கை அனுப்பினர். அதனடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்காக டெல்லியிலிருந்து மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகள் 10 பேர் காலை 7 மணிக்கு அதிரடியாக குவாரிக்குள் நுழைந்தனர். அங்குள்ள அலுவலகத்தில் பணியிலிருந்த ஊழியர்களிடம் குவாரியின் செயல்பாடுகள், கற்கள் வெட்டி எடுப்பது குறித்து விசாரணை நடத்தினர்.
மத்திய அரசு அதிகாரிகளின் இந்த அதிரடி சோதனையையொட்டி, குவாரியின் நுழைவுவாயிலில் 10க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப். போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அந்தப் பகுதியில் அதிமுக-வினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டிருப்பதால் தற்போது பதட்டமான சூழல் நிலவி வருகிறது  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக