திங்கள், 17 ஏப்ரல், 2017

சிவகங்கை ஜல்லிக்டட்டு கலவரம் .. பரிசு பொருட்களை எடுத்துகொண்டு மக்கள் ஓட்டம் .. இருவர் பலி ..

சிவகங்கை மாவட்டம் எம். புதூரில் ;இன்று நடைபெற்ற பிரமாண்ட ஜல்லிக்கட்டில் காத்திருந்த 200க்கும் மேற்பட்ட காளைகளுக்கு பரிசு வழங்க முடியாது என விழாக்கமிட்டி சொல்லியதால் கைகலப்பு ஏற்பட்டது.<சிவகங்கை மாவட்டம் எம்.புதூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அந்தக் காளைகளை அடக்குவதற்கு 1000-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் களத்தில் இருந்தனர். பிற்பகல் 3.30 மணியுடன் ஜல்லிக்கட்டு முடிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு முடிக்கப்பட்டாலும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வந்த காளைகளுக்கு பரிசு வழங்கவேண்டும் என்பது வழக்கமான விதிமுறை. ஆனால், காத்திருந்த 200க்கும் மேற்பட்ட காளைகளுக்கு பரிசு வழங்கமுடியாது என விழாக்கமிட்டி சொல்ல, காளை உரிமையாளருக்கும் கமிட்டிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. லாரிகளில் வைக்கப்பட்டிருந்த பீரோ உட்பட பல பரிசுகளை காளை உரிமையாளர்கள் எடுத்துக் கொள்ள முற்பட இரு தரப்பிற்கும் கைகலப்பு ஏற்பட்டது.விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக