வியாழன், 20 ஏப்ரல், 2017

நேற்றைய ஜெயாவின் பூச்சிகள்... இன்றைய பாஜகவின் பூச்சிகள் .. மக்களுக்கு பூச்சியம்!

சசி, தினகரன் அண்ட் குரூப்ஸ் யோக்கியர்களில்லை தான், ஆனால் ops அண்ட் கோ மட்டும் புனித ஆத்மாக்களா ?
பின்ன ஏன் ops யை ஆதரித்து, சசி கோஷ்டியை விரட்டி, விரட்டி அடிக்கிறது பாஜக?
அம்மையாரையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த சசி கோஷ்டி இப்போது தங்களை நிலைநிறுத்தி கொள்ள இப்போதைக்கு அனுசரித்து போனாலும் எல்லாம் 'செட்டில்' ஆன பிறகு தங்களை கண்டிப்பாக எதிர்ப்பார்கள், கட்சியை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவிடுவார்கள். பிறகு பாஜக வழக்கம் போல டெபாசிட் இழக்கனும். அதே ops என்றால் பதவியையும், பல்லாயிரம் கோடி சொத்துக்களையும் காத்துக்கொள்ள அவர்கள் கை காட்டும் இடத்தில் கையெழுத்து போடுவார்.. காலிருக்கும் இடத்தில விழுந்து கிடப்பார்..
அவர்கள் அடிமைகளையே விரும்புகிறார்கள்..
By Akila Ramakrishnan  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக