வெள்ளி, 28 ஏப்ரல், 2017

அ. தி.மு.கவுக்குள் பாஜகவின் நச்சுபாம்புகள் .. ரத்தத்தின் ரத்தங்களே தூங்காதீர் தூங்கினால் இனி விழிக்கவே முடியாது!

டெல்லியில் கோலோச்சும் பார்ப்பன அதிகார வர்க்கத்திற்கு தமிழகத்தின் மீது ஏனிந்த கொலைவெறி...?
நீதிக்கட்சி தொடங்கி திராவிட சிந்தனையாளர்களால் , தங்கள் பார்ப்பனிய மேலாண்மை சித்தாந்தம் கேள்விக்குள்ளாக்க படுவதால் உண்டான காழ்புர்ணச்சிதானே...!
கடந்த 65 ஆண்டுகளாக ஒரு கட்சி தமிழகத்தின் தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல், இந்தியாவின் பன்மைக் கலாச்சாரத்தின் காவலனாக வலம் வருவதும் , அரசியலில் மக்களால் ஆரியத்திற்கெதிரான கேடயமாக முன்நிறுத்தப் படுவதும் அதிகார வர்க்கத்தின் கண்களை உறுத்துகிறது.
தி.மு.க. வை முடக்க அவர்கள் நடத்திய நாடகங்கள் எல்லாம் தொடர் தோல்விகளை சந்திக்கும் போது , தி.மு.க. வின் நிலைத்தன்மை உறுதியாவதும், போலி திராவிடத்தின் நிலைத்தன்மை நிலைகுலைந்து கிடப்பதும் அவாள்கள் நெஞ்சில் தனலாய் கொதிப்பது தெரிகிறது...
அதனால் தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்பி, அவர்களின் வாழ்வாதாரங்களின் உரிமைக்காக அவர்களை தங்களிடம் கையேந்த வைப்பதும், வளர்ச்சி என்ற பெயரில் தமிழகத்தை அணு உலைகளாலும், நியூட்ரினோ ஆய்வு கூடங்களாலும், இயற்கை எரிவாய்வு வயல்களாகவும் மாற்றி பெரு முதலாளிகளின் வேட்டைக் காடாக மாற்றுவதும்தான் தமிழினத்துக்கு தாங்கள் கொடுக்கும் தண்டனை என்று மத்திய ஆளும் வர்க்கம் முடிவு செய்து விட்டது.

தங்களின் தகிடுதத்தங்களை தடையின்றி நடத்த அ. தி.மு.க. வை தன் முகமூடியாக அணிய மோடி நடத்தும் நாடகம் எதுவரை நீளும் என்பது அடிமைகளின் சுய மரியாதையில் சுருண்டு கிடக்கிறது...!
தி.மு.க. வின் விஸ்வரூபம் மோடியின் முன்னகர்வுக்கு முட்டுக்கட்டையாக மாறும் என்ற சோ, குருமூர்த்தி போன்றவர்களின் ஆலோசனைப் படிதான் அ. தி.மு.க. வில் பா.ஜ.க. வின் இரத்தம் கலக்கப்படுகிறது. அதற்காக தினகரன் என்ற வைரஸ் அழிக்கப்பட்டு , ஒ பி எஸ் என்ற துரோக வைரஸ் வளர்க்கப் படுகிறது.
ஆனால் மக்கள் தங்களின் ஆண்ட்டி வைரஸாக தி.மு.க. வை தான் முன்வைக்கின்றனர்...! தேர்தல் வைத்தால் தி.மு.க. வெல்வது உறுதி...! தாமரை கருகி உதிரப்போவதும் உறுதி...!!
-வனத்தையன் தமிழரிமா  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக