திங்கள், 3 ஏப்ரல், 2017

வைகோ புழல் சிறையிலடைப்பு

தேசத்துரோக வழக்கில் நீதிமன்றக்காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. 2008ம் ஆண்டில் சென்னை ஆயிரம் விளக்கு ராணி சீதை மன்றத்தில் நடந்த விழாவில் வைகோ பங்கேற்றார். அவ்விழாவில் பேசிய வைகோ, ஈழத்தமிழர் படுகொலைக்கு இந்திய அரசுதான் காரணம் என்று பேசினார் வைகோ. இதையடுத்து, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ வழக்குதொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக இன்று எழும்பூர் நீதிமன்றம் வந்தார் வைகோ. வழக்கு விசாரணையில், வைகோ ஜாமீனில் செல்ல விருப்பம் தெரிவிக்காததால், வைகோவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார் வைகோ.. நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக