வெள்ளி, 21 ஏப்ரல், 2017

சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா!


சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா!சென்னையின் வெப்பம் 100 டிகிரியைத் தாண்டி அடித்துக்கொண்டிருந்தாலும், சினிமா காதலர்கள் குதூகலமாக மற்றொரு திரைப்பட விழாவுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் மற்றும் Delegation of The European Union to India இணைந்து நடத்தும், ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா நாளை (ஏப்ரல், 22) சனிக்கிழமை வாலஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தொடங்கவுள்ளது. மாலை 6.15 மணிக்கு ஆரம்பமாகும் இந்த விழாவை தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு தொடங்கிவைக்கிறார். போர்ச்சுக்கல் நாட்டு தூதர் திரு. Joao Da Camara சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மே 4ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் போர்ச்சுக்கல், ஜெர்மனி, பெல்ஜியம், டென்மார்க் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
திரையிடப்படும் படங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கீழேயுள்ள எண்ணைத் தொடர்புகொண்டு திரைப்பட விழாவுக்கான டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.
044-28212652  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக