திங்கள், 3 ஏப்ரல், 2017

நான் ஒரு இந்தியன் : தலாய் லாமா


இந்திய கலாச்சாரத்தின் தூதராக மாறியிருக்கிறேன் என, திபெத் புத்தமதத் தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார்.
அசாம் மாநிலம், கவுகாத்தி நகரில் ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற்ற கருத்தரங்கில், திபெத் புத்தமதத் தலைவர் தலாய் லாமா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘நான் கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசின் கவுரவ விருந்தாளியாக இருந்து வருகிறேன். தற்போது இந்திய கலாச்சாரத்தின் தூதராக மாறியிருக்கிறேன்.
கடந்த சில வருடங்களாக இந்தியாவின் மகன் என்றே நான் கூறி வருகிறேன். அதற்குக் காரணம், என் மூளையின் அனைத்துப் பகுதிகளிலும் நாலந்தாவின் நினைவுகள் நிரம்பியிருக்கின்றன. உடல்ரீதியிலும் உணர்வுரீதியிலும் நான் ஒரு இந்தியன்’ எனத் தெரிவித்தார். நிகழ்ச்சியின்போது, அசாமி மொழியில் எழுதப்பட்ட ‘என் நிலம் என் மக்கள்’ என்ற தனது சுயசரிதை புத்தகத்தை அவர் வெளியிட்டார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக