ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

அதிமுக தலைமை ஏற்க டாக்டர் வெங்கடேஷுக்கு அழைப்பு

சென்னை: அதிமுக தலைமை ஏற்க வெங்கடேஷுக்கு அழைப்பு விடுத்து ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா காலத்தில் இளைஞர், இளம்பெண் பாசறை தலைவராக இருந்த டாக்டர் வெங்கடேஷ் சர்ச்சையில் சிக்கியதால் 2011ல் ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சென்னை முக்கிய இடங்களில் வெங்கடேஷ்க்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக