புதன், 26 ஏப்ரல், 2017

குஷ்பூ :தமிழகத்தில் பா.ஜ.க நுழைய முடியாது.. அவர்களின் கனவு பலிக்காது!

பா.ஜ.க கனவு பலிக்காது - குஷ்பு பேட்டி
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளராக நான் இருப்பதால் சில வி‌ஷயங்களை ராகுல்காந்தியிடம் சொல்ல வேண்டியிருந்தது. அதனால் அவரை சந்தித்து பேசினேன். டெல்லியில் விவசாயிகளை சந்திக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் முதல்வர் பழனிசாமி சந்திப்பை தொடர்ந்து அவர்கள் ஊருக்கு சென்றுவிட்டனர். 41 நாட்கள் போராட்டம் நடத்திய அவர்களை முதல்வர் 40 நாட்களுக்கு பிறகுதான் சந்தித்து இருக்கிறார். விவசாயிகளுக்காக தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
இதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதிமுக-வின் இரு அணிகளும் இணையும் முயற்சிக்கு இரட்டை இலை சின்னமே காரணம். அவர்கள் தனித்தனியாக தேர்தலில் நின்றால் யாருக்கும் ஓட்டு கிடைக்காது. இப்போது 3–வதாக டி.டி.வி.தினகரன் வந்திருக்கிறார். தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு வி‌ஷயத்தின் பின்னணியிலும் பா.ஜ.க இருக்கிறது. தமிழக அரசியலில் அதிமுகவும், பா.ஜனதாவும் கூட்டணி சேர்ந்தால் ஆச்சரியப்பட வேண்டியது இல்லை. ஆனால் தமிழகத்தில் பா.ஜ.க நுழைய முடியாது. அவர்களின் கனவு பலிக்காது. இவ்வாறு கூறினார்.நக்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக