சனி, 29 ஏப்ரல், 2017

ஜெ., சொத்து ஆவணங்கள் கொள்ளை ? கோடநாடு எஸ்டேட்டில் புது, புது மர்மம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான, கோடநாடு பங்களாவில் இருந்து முக்கிய சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. ஊட்டி: கோடநாட்டில் உள்ள ஜெ.,வுக்கு சொந்தமான பங்களாவில் இருந்து முக்கிய சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக தற்போது ஒரு புதிய தவகல் பரவியுள்ளது. கடந்த 24 ம் தேதி இங்கு காவலாளி ஓம் பகதூர் என்பவர் மர்ம நபர்களால் கழுத்தை நெறித்து கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்கள் திருடும் விதமாகவே இங்கு வந்துள்ளனர். இந்நேரத்தில் கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.  மத்திய-மாநில நிர்வாகம்?ரெண்டுமே கூட்டு களவாணிகள் .ஜெவின் முக்கால்வாசி சொத்துக்கள் சொத்துக்குவிப்பு சம்பந்தப்பட்டவை இவை தமிழக அரசுக்குதான் சொந்தம் என்பது தீர்ப்பு தீர்ப்பு வந்து பல மாதங்களாகியும் அரசு எடுத்துக்கொள்ளாதது சந்தேகத்தை தருகிறது
சொத்து ஆவணங்கள் அடங்கிய 3 சூட்கேஸ்கள் இந்நிலையில் இங்கு உள்ள சொத்து ஆவணங்கள் கொள்ளை போய் இருப்பதாக போலீஸ் தரப்பில் உறுதி செய்யப்படாத தகவல் கூறுகிறது. சுமார் 100 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் 3 சூட்கேஸ்களில் திருடு போய் இருக்கலாம் என்றும் தெரிகிறது. கோடநாடு கொலை வழக்கில், இன்று இரு விபத்துகளில் தேடப்பட்டவர்கள் சிக்கியுள்ளனர். இந்நிலையில் சொத்து ஆவணங்கள் மாயம் என்ற இந்த தகவலால் கோடநாட்டில் மேலும் பரபரப்பு உஷ்ணம் தொற்றியுள்ளது dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக