வெள்ளி, 28 ஏப்ரல், 2017

ஒரு இளைஞனின் வாழ்வை குலைக்கும் பரபரப்பு வியாதி பத்திரிக்கை .. 99 wiki என்ற காவி இணையத்தின் விஷம் பொய் பித்தலாட்டம் !

கருப்பு கருணா  :  இன்னமும் இந்த மக்கள் பத்திரிகைகளில் வரும் செய்திகளை உண்மையென்றே நம்புகிறார்கள்.அத்தகைய இடத்தில் இருக்கும் பத்திரிகைகள் தங்களின் பரபரப்பு அரிப்புக்காகவும் விற்பனைக்காகவும் மேஜையில் உட்கார்ந்து கொண்டு எழுதும் செய்தியால் எவ்வள்வு பேர் பாதிக்கப்படுவார்கள் என அவர்கள் உணர்கிறார்களா..?
இந்த கொடுமையான செய்தியை பாருங்கள்.
திருவண்ணாமலையை சேர்ந்த இளைஞர் ஷேக் ஹூசைன்.படித்த..முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர். நகரில் நடக்கும் நியாயமான போராட்டங்களில் முன்வரிசையில் நின்று குரல் கொடுக்கும் இளைஞர்.பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர்.மார்க்சிய,அம்பேத்காரிய இயக்கங்களுடன் நல்லுறவுடன் இருப்பவர்.
இவரைப்பற்றி ” விவசாயிகள் போர்வையில் தீவிரவாதி ? ” என்று தலைப்பிட்டு தமிழக அரசியல் என்ற வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இவர் டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் 42 நாட்களும் கலந்துகொண்டார் என எழுதியுள்ளது அப்பத்திரிகை.ஆனால் அவரோ கடந்த 16 ஆம் தேதி புறப்பட்டு 18 ஆம் தேதிதான் அங்கு போய் சேர்ந்தார்.23 ஆம் தேதி போராட்டம் முடிந்தவுடன் அய்யாக்கண்ணுவுடன் ரயிலிலேயே புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வந்துவிட்டார். மொத்தம் 6 நாட்கள்தான் அங்கு இருந்தார்.ஆனால் 42 நாளும் இருந்தார்ன்னு பொய்யை எழுதி கதையை துவக்குகின்றனர்.

இவர் முகநூலில் போட்ட பதிவுகளை வைத்து இவர் காஷ்மீர் தீவிரவாதி என்று புனைகிறார்கள். அப்சல் குருவை தூக்கிலிட்டதை விமர்சித்து பதிவு போட்டிருப்பதால் தீவிரவாதிதான் என முடிவுக்கு வருகிறார்களாம். நானும்கூடத்தான் அப்சல்குருவை தூக்கிட்டதை எதிர்த்தேன்.ஆனால் அவரை மட்டும் தீவிரவாதி எனக்குறிப்பிட அவரது இஸ்லாமிய பெயர்தானே காரணம்.
சில நாட்களுக்கு முன் 99 wiki என்ற காவி இணைய இதழிலும் இப்படி ஒரு பொய்யான செய்தியை பரப்பினார்கள்.அதுகுறித்து பலரும் என்னிடம் தெரிவித்தனர்.இப்போது காவிகளின் பொய்யை வைத்து தமிழக அரசியல் இதழும் ஒரு இளைஞனை…அவன் இஸ்லாமியன் என்பதாலேயே தீவிரவாதி என முத்திரை குத்துவது எந்த வகையில் நியாயம்.இப்படியொரு செய்தியை எழுதும் முன்பு சம்பந்தப்பட்டவரிடம் விசாரித்தீர்களா..? அல்லது போராட்டத்தை நடத்திய அய்யாக்கண்ணுவிடமாவது கேட்டீர்களா..?
இது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறிய செயல். இதனை அனைவரும் கண்டிக்க வேண்டும்.மனித உரிமை அமைப்புகள் இதனை விசாரித்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும். இதனை பரவலாக பகிர்ந்து காவிகளை…போலி பத்திரிகைகளை அம்பலப்படுத்துவோம். ஒரு நல்ல மனிதனை பாதுகாப்போம்.
கருப்பு கருணா, தமுஎகச மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்.  thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக