சனி, 15 ஏப்ரல், 2017

8 வயது அண்ணன் வேன் எடுத்துகொண்டு 5 வயது தங்கைக்கு சீஸ் பர்கர் வாங்க சென்றான்


அமெரிக்காவில் 8 வயது சிறுவன் தனது தங்கைக்கு பர்க்க வாங்க வேன் ஓட்டிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. By: Kalai Mathi
வாஷிங்டன்: அமெரிக்காவில் 8 வயது சிறுவன் தனது தங்கைக்கு பர்க்க வாங்க வேன் ஓட்டிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யூடியூப் மூலம் கார் ஓட்ட கற்றுக்கொண்டு சிறுவன் வேனை ஓட்டிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தின் கிழக்கு பாலெஸ்டின் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவன் 4 வயது சிறுமியுடன் வேனை ஓட்டிச்சென்றுள்ளான். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்."பெற்றொர் தூங்கிக்கொண்டிருந்தனர் " s இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸ் அதிகாரி ஜேக்கப் கோச்லருக்கு தலைமையிலான குழுவினர் சிறுவனையும் வேனையும் தேடி விரைந்து சென்றனர்.

.. சீஸ் பர்கர் சாப்பிட்ட சிறுவன் அதற்குள் அந்த சிறுவன் வேனை ஆளில்லா ரயில்வே கேட் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக மெக் டோனால்டுக்கு சென்றான்.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சிறுவன் தனது தங்கையுடன் அமர்ந்து சீஸ் பர்கர் சாப்பிடுவதை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டனர். பர்கர் சாப்பிட ஆசை இதையடுத்து சிறுவனிடம் சென்ற போலீஸ் அதிகாரி கோச்லர் ஏன் வேன் ஓட்டி வந்தாய்? என கேட்டார்.
அதற்கு அவன் எங்களுக்கு சீஸ் பர்கர் சாப்பிட ஆசையாக இருந்தது என்றான். பெற்றொர் தூங்கிக்கொண்டிருந்தனர் ஆனால் எனது அம்மாவும், அப்பாவும் நன்றாக தூங்கி கொண்டிருந்தனர்.
அவர்களை தொந்தரவு செய்யாமல் எனது தங்கையை அழைத்துக் கொண்டு தந்தையின் வேனை ஓடி வந்தேன் என்றான். யூடியூப் பார்த்து.. வேன் ஓட்ட எப்படி கற்றுக் கொண்டாய் என கேட்டதற்கு யூடியூப் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கூறினான்.
இதனைக் கேட்டு போலீசார் மேலும் அதிர்ச்சியடைந்தனர். சாலை விதிகளை மதித்த சிறுவன் ஆனால் வேனை ஓட்டிச்செல்லும் போது சிறுவன் சாலை விதிகளை மதித்து சென்றதாகவும் அதனை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தைகளை கண்காணிக்கும் படி அறிவுறுத்தப்பட்ட  tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக