வெள்ளி, 28 ஏப்ரல், 2017

வரதட்சணை ..3 தலாக் கூறிய புரட்சிப் பெண்! ஜார்கண்ட் திருமண தினத்திலேயே ...

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியைச் சேர்ந்த இஸ்லாமியரான அன்சாரி என்பவருக்கும், ராஞ்சி அருகில் உள்ள சந்வே கிராமத்தைச்சேர்ந்த, ருபானா பர்வீனுக்கும் திருமணம் நடைபெற்றது.
இதில் திருமணம் முடிந்த கையோடு ருபானா பர்வீனின் தந்தை, தன் மருமகனுக்கு ஒரு பைக்கை திருமணப் பரிசாகக் கொடுத்தார். ஆனால், மருமகன் அன்சாரியோ...தனக்குப் பிடித்த 'பல்சர் பைக்' தான் வேண்டும் என்று, திருமணத்திற்கு வந்தவர்களின் முன்னிலையில் வாக்குவாதம் செய்தார்.
இதையறிந்த மணப்பெண் ருபானா பர்வீன், தன் வீட்டினரின் உணர்வுகளை மதிக்காத அன்சாரியிடம் விரக்தியில் மூன்று முறை தலாக் கூறி திருமணபந்தத்தை முறித்தார். இதையடுத்து பெரியோர்கள் முன்னிலையில் முறைப்படி தலாக் வழங்கப்பட்டது. பின்னர், மணப்பெண்ணின் வீட்டார், திருமணத்துக்காக செலவளித்த 7.25 லட்ச ரூபாயை திருப்பிக் கேட்டனர். ஆனால், அதற்கு மணமகன் வீட்டார் திட்டமிட்டு தர மறுத்தனர்.
இதனால் மணப்பெண்ணின் வீட்டைச் சேர்ந்தவர்கள், அன்சாரி மற்றும் அவரது உடன்பிறந்தவர்களின் தலையை உடைத்து, மொட்டையடித்தனர். பின்னர் அவர்களுக்குச் செருப்பு மாலை அணிவித்து, 'வரதட்சணையில் பேராசைக்காரன்' என்ற வாசகத்தை அட்டையில் எழுதி, அவர்களது கழுத்தில் தொங்கப்போட்டனர்.

பின்னர் திருமணத்துக்குச் செலவளித்த பணம் மணப்பெண் வீட்டாருக்கு திருப்பிகொடுக்கப்பட்டது. பிறகு தலாக் கூறி விவாகரத்து பெற்ற பெண், அன்று இரவே தன் மற்றொரு உறவினர்வீட்டு ஆணுடன் திருமணம் செய்துகொண்டார்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக