செவ்வாய், 25 ஏப்ரல், 2017

சட்டீஸ்கர்: மாவோயிஸ்ட் தாக்குதலில் 26 சி.ஆர்.பி.ஃஎப். போலீசார் பலி

சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், மாவோயிஸ்ட் குழுவினர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 2 சி.ஆர்.பி.ஃஎப். (மத்திய ரிசர்வ் போலீஸ் ) படையினர் கொல்லப்பட்டுள்ளனர். >கிளர்ச்சியாளர்கள் இந்த ஆண்டில் நடத்திய மிக மோசமான தாக்குதலாக இத்தாக்குதல் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் கிழக்கு முதல் தென்கிழக்கு வரை பல மாநிலங்களில் உள்ள சதுப்புநிலப் பிரதேசங்களை மாவோயிஸ்ட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
நாட்டில் கம்யூனிஸ்ட் ஆட்சியை நிறுவிடவும், உள்நாட்டுப் பழங்குடியினர் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு கூடுதலான உரிமைகள் பெற்றுத் தரவும், தாங்கள் போராடுவதாக மாவோயிஸ்ட்கள் கூறுகின்றனர்.
தாக்குதல் நடந்த சுக்மா மாவட்டம் மாவோயிஸ்ட்களின் கோட்டையாக கருதப்படுகிறது.

சாலை உருவாக்கும் வேலையில் ஈடுபட்ட பணியாளர்களை காக்கும் பணியில், சிறப்பு துணை ராணுவ அலகில் இருந்து உருவாக்கப்பட்ட போலீஸ் பிரிவினர் ஈடுபட்டபோது, மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பல மணி நேரம் நடந்ததாக கூறப்படும் இத்தாக்குதலில், பல நூறு கிளர்ச்சியாளர்கள் பங்கேற்றதாக ஒரு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர்கள் மூலம் ராய்ப்பூர் கொண்டு செல்லப்பட்டனர்.
தாக்குதல்தாரிகளை தேட தற்போது கூடுதல் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடந்த பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.  maalaimalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக