புதன், 12 ஏப்ரல், 2017

கேரளாவில் 10 வகுப்புவரை மலையாளம் கட்டாய பாடம் ... அவசர சட்டம் அமுல்!


திருவனந்தபுரம்- கேரள முதல்வர் பினராயி விஜயன், திருவனந்தபுரத்தில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர்  கூறியதாவது: கேரளாவில் 10ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் மலையாள மொழியை கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்தில் நேற்று மாலையே கவர்னர் கையெழுத்து போட்டு விட்டார். இதனால் மலையாள மொழியை கட்டாயமாக்கும் அவசர சட்டம் இந்த வருடம் முதல் அமலுக்கு வந்துள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்சி உள்பட அனைத்து பள்ளிகளிக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இந்த உத்தரவை அமல்படுத்த தவறினால் பள்ளி தலைமையாசிரியருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
மீண்டும் தவறு செய்தால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மேலும் சில பள்ளிகளில் மாணவர்கள் மலையாள மொழி பேச கூடாது என்று உத்தரவு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அதுபோன்ற நடைமுறை இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  தமிழ் முரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக