வெள்ளி, 31 மார்ச், 2017

தென் கொரிய முன்னாள் குடியரசு தலைவர் கைது .. ஊழல் குற்றச்சாட்டு ..

அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பார்க் கியன் ஹை வெள்ளிக்கிழமையன்று சியோல் காவல் மையத்திற்கு வந்தார். அதிகார துஷ்பிரயோகம், ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சியோல் மாவட்ட நீதிமன்றம் பார்க்கின் மீதுள்ள லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம், கட்டாயப்படுத்துதல், அரசு ரகசியங்களை வெளியிடுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் நிமித்தம் அவரை கைது செய்ய உத்தரவிட்டது.
பார்க்கை கைது செய்வது அவசியம் எனவும், அவரை வெளியிட்டால் ஆதாரங்களை அவர் அழிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் நீதிமன்றம் அறிவித்தது.

வெள்ளிக்கிழமை காலை சுமார் 4.45 மணிக்கு(இந்திய நேரப்படி நள்ளிரவு 1.15 மணி) பார்க் கியன் ஹை சிறை வந்தடைந்தார். 50-க்கும் மேற்ப்பட்ட ஆதரவாளர்கள் கைகளில் கொடியுடன், பார்க்கை விடுவிக்க கோரி கூச்சலிட்டனர்.
தென்கொரியாவின் முதல் பெண் அதிபர் காவலில் வைக்கப்பட்டது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்க் கியன் ஹைக்கு 65 வயதாகிறது.
வியாழக்கிழமையன்று நடந்த விசாரணையில் பார்க் கியன் ஹை குறித்த 120,000 பக்கங்கள் கொண்ட ஆவணத்தை அரசு வழக்கறிஞ்கர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். சுமார் 9 மணி நேரத்திற்கு இந்த விசாரணை நடைபெற்றது. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக