வியாழன், 2 மார்ச், 2017

என் தேசம் என் உரிமை கட்சி தனித்துப் போட்டி! திராவிட மற்றும் தேசிய கட்சிகளோடு கூட்டணி கிடையாதாம்!


வரவிற்கும் உள்ளாட்சி தேர்தலில் தேசிய மற்றும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று என் தேசம் என் உரிமை கட்சி அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் 'லஞ்சம் ஒழிந்தால் நாடு முன்னேறும்’ என்ற முழக்கத்துடன் புதிதாக என் தேசம் என் உரிமை என்ற கட்சியை துவங்கினர். இந்த கட்சியை துவங்கிய சில நாட்களில் ஆன்லைன் மூலம் 6 லட்சம் உறுப்பினர்கள் இக்கட்சியில் இணைந்துள்ளதாக கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இக்கட்சியின் ஒருங்கிணைபாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது,
"தமிழகத்தில் தனி தலைவரை முன்னிருத்தியே அரசியல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையை மாற்றுவதே எங்களுடைய லட்சியம். அரசியலுக்கு இளைஞர்கள் நிச்சயம் வரவேண்டும். அந்தவகையில் என் தேசம் என் உரிமை கட்சி நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும். எங்கள் கட்சி சார்பில் போட்டியிட வயது வரம்பு நிர்ணயித்துள்ளோம். அதன்படி வயதிற்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது அவர்கள் கட்சியின் ஆலோசகர்களாக மட்டுமே செயல்பட முடியும். சாதி மத அடிப்படையிலும் பணம் புகழ் அடிப்படையிலும் தேர்தலில் நிற்க வாய்ப்பு வழங்கப்படாது.திராவிட மற்றும் தேசிய கட்சிகளுடன் என்றும் கூட்டணி கிடையாது" என்றனர். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக