புதன், 1 மார்ச், 2017

தனுஷ் ,,, பெற்றோர் யார் என்ற வழக்கு விசாரணை !


தனுஷ் தங்களது மகன் என்று உரிமை கொண்டாடிவரும் கதிரேசன் மீனாட்சி தம்பதியினரின் வழக்குப்படி நேற்று மதுரை மேலூரிலுள்ள சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணை தொடங்கியது. கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நீதிமன்றத்தில் தங்களது மகனின் அடையாளமாக பின்கழுத்துப்பகுதியில் ஒரு மச்சமும், முழங்கையில் தழும்பும் இருக்குமென்று நீதிமன்றத்தில் கூறியிருந்தனர். தன் உடலில் அதுபோன்ற அடையாளங்கள் ஏதுமில்லை என்று தனுஷ் முன்வைத்த வாதத்தைத் தொடர்ந்து மதுரை கோர்ட்டுக்கு நேரடியாக வந்து நிரூபிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை மேலூர் கிளையில் தனது தாயார் விஜயலட்சுமியுடன் ஆஜராகியிருந்த தனுஷிடம், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் குழு நீதிமன்ற ரிஜிஸ்டரர் இளங்கோவன் முன்னிலையில் கதிரேசன் - மீனாட்சி தரப்பினர் குறிப்பிட்டிருந்த அடையாளங்களை பரிசோதித்தனர்.


தனுஷின் வாதத்தின்படி அவர்கள் சொல்லும் எந்த அடையாளமும் என்னிடம் இல்லை. சரியான ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரியிருக்கிறார். ஆனால், கதிரேசன் தம்பதியினர், அவர்களது மகனின் பள்ளி Transfer Certificate(பரிமாற்ற சான்றிதழ்)-இல் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் டாகுமெண்டை சமர்ப்பித்தார்கள். தனுஷ் தரப்பில் அவரது பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த சர்டிஃபிகேட்டில் எவ்வித அடையாளங்களும் இருப்பதாகவும், இல்லையென்றும் குறிப்பிடப்படாமல் காலியாக விடப்பட்டிருந்தது.
கதிரேசன் - மீனாட்சி தரப்பில் தனுஷ் சமர்ப்பித்திருக்கும் பிறப்புச் சான்றிதழ் 1993ஆம் ஆண்டு பெறப்பட்டிருக்கிறது. அதாவது, தனுஷ் பிறந்த 1983லிருந்து 10 ஆண்டுகள் கழித்து இந்த சர்டிஃபிகேட்டை வாங்கியிருக்கிறார்கள் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இதைக் குறித்துவைத்துக்கொண்ட நீதிபதியிடம், அந்த சர்டிஃபிகேட்டில் தனுஷின் பெயரே இடம்பெறவில்லை என்பதையும் கதிரேசன் மீனாட்சி தரப்பு எடுத்துக்கூறியதுடன், தனுஷின் தந்தையெனச் சொல்லிக்கொள்ளும் கஸ்தூரி ராஜாவின் பெயர் சர்டிஃபிகேட்டில் கிருஷ்ணமூர்த்தி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர், கடந்த 2015 பிப்ரவரி 18ஆம் தேதி தனது பெயரை கஸ்தூரி ராஜா என மாற்றியதற்கான ஆவணங்கள் அவர்கள் தரப்பிலேயே சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. 2002ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் கஸ்தூரி ராஜா என்று தான் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று கூறினார்கள்.

மேலும் தனுஷ் தரப்பில் என் இயற்பெயர் R.K.வெங்கடேஷ ராஜா. நான் எனது பெயரை 2003ஆம் ஆண்டு தனுஷ் K ராஜா என மாற்றிக்கொண்டேன் என்று கூறப்பட்டது. ஆனால், சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் ஆதாரங்களில் 2003ஆம் ஆண்டுக்கு முன்பிலிருந்தே தனுஷ் என்ற பெயரைப் பயன்படுத்திவந்ததை கதிரேசன் மீனாட்சி தரப்பில் கோடிட்டுக் காட்டினார்கள்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தபிறகு, வழக்கு தொடர்ந்த கதிரேசன் - மீனாட்சி தரப்பினர் சரியான ஆதாரங்களை சமர்ப்பித்து நிரூபிக்காததால் தனுஷை வழக்கிலிருந்து விடுவிக்கும்படியும், இவர்கள் இருவரையும் பணத்துக்காக யாரோ தூண்டிவிட்டிருப்பதாகவும் கூறினார்கள். கதிரேசன் - மீனாட்சி தரப்பில் தனுஷ் எங்கள் பராமரிப்பில் 13 வயது வரை(8வது படிக்கும் வரை) இருந்ததாகவும், அதன்பின் ஹாஸ்டலிலிருந்து ஓடிவிட்டதாகவும், நல்வாழ்வு வாழும் தங்கள் மகனைக் கெடுக்கவிரும்பவில்லை எனவும், ஜீவனாம்சமாக மாதம் 65,000 ரூபாய் கொடுத்துவிடும்படியும் கூறியிருக்கிறார்கள். இரு தரப்பு வாதங்களையும் தீரவிசாரித்த நீதிபதி G.சொக்கலிங்கம் மார்ச் 2ஆம் தேதிக்கு தீர்ப்பை தள்ளிவைத்து உத்தரவிட்டிருக்கிறார்.  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக