வெள்ளி, 31 மார்ச், 2017

ஆர் கே நகரில் கனிமொழிக்கு ஸ்டாலின் தடை ! 43000 நாடார் வாக்குகள் கனிமொழி உபயம் என்றாகி விடக்கூடாதாம்?

சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் பிரசாரம் செய்ய ஸ்டாலின் தரப்பு விதித்த தடை நீடிப்பதால் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி தரப்பு கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திமுகவின் செயல் தலைவரான பின்னர் கட்சி தொண்டர்களிடத்தில் நெருக்கமாக இருப்பதற்கான சில நடவடிக்கைகளை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அதே நேரத்தில் தமது குடும்ப உறுப்பினர்கள் யாருமே ஆதிக்கம் செலுத்திவிடாமல் 'கண்ணும் கருத்துமாக' இருந்து வருகிறது ஸ்டாலின் தரப்பு.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 43,000 நாடார் சமூக வாக்குகள் உள்ளன. திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியை களமிறக்கினால் எளிதாகவே நாடார் சமூக வாக்குகளை அள்ள முடியும் என்பது திமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு.


ஆர்.கே நகர் தேர்தலுக்கு ஓ.பி.எஸ் அணிக்கான வேட்பாளர்.." ஆர்.கே நகர் தேர்தலுக்கு ஓ.பி.எஸ் அணிக்கான வேட்பாளர்.."இருந்தபோது தமது குடும்பத்தைச் சேர்ந்த கனிமொழியை களமிறக்கி பிரசாரம் செய்து அதன் மூலம் வெற்றி பெற்றோம் என்ற நிலைமை வந்துவிடக் கூடாது என்பதுதான் ஸ்டாலின் தரப்பின் நோக்கமாக இருக்கிறது.

இதனால் இதுவரை கனிமொழியின் பிரசாரத்துக்கு க்ரீன் சிக்னல் கொடுக்காமல் முட்டுக்கட்டை போட்டு வருகிறதாம் ஸ்டாலின் தரப்பு.
"டெல்லி அரசியலுக்காக கருணாநிதியால் அனுப்பி வைக்கப்பட்டவர் கனிமொழி.
ஆனால் ஸ்டாலின் தரப்போ. டெல்லி அரசியல் பணிகளை கனிமொழியிடம் ஒப்படைப்பதில்..." ஏற்கனவே அதிருப்தி" ஏற்கனவே அதிருப்தி
டெல்லி அரசியலுக்காக கருணாநிதியால் அனுப்பி வைக்கப்பட்டவர் கனிமொழி. ஆனால் ஸ்டாலின் தரப்போ. டெல்லி அரசியல் பணிகளை கனிமொழியிடம் ஒப்படைப்பதில்லையாம். மருமகன் சபரீசன், திருச்சி சிவா மூலமாகவே டெல்லி அரசியல் பணிகளை மேற்கொள்வதில் ஏற்கனவே கனிமொழி தரப்பு அதிருப்தியாம்.

தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் கனிமொழிக்கு இன்னமும் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் திமுக தொண்டர்களிடையே நாள்தோறும் பேசுபொருளாக இருந்து வருகிறது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத ஸ்டாலின் தரப்பு, கூடுமானவரை கனிமொழியை ஓரம்கட்டி வைப்பதில் உறுதியாகவே உள்ளதாம். இதில் தொடர்ந்து கனிமொழி தரப்பு அதிருப்தியாகவே இருந்து வருகிறதாம் tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக