வெள்ளி, 24 மார்ச், 2017

சிவசேனா எம்.பி. ஏர் இந்தியா ஊழியரை 25 தடவை அறைந்தார் .


மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட். இவர் பெயரில், மத்திய பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமானத்தில் டெல்லிக்கு எந்த தேதியில் வேண்டுமானாலும் ‘பிசினஸ்’ வகுப்பில் பயணிப்பதற்கு டிக்கெட் எடுக்கப்பட்டு இருந்தது.;திடீரென அவர், நேற்று காலை 7.35 மணிக்கு மராட்டிய மாநிலம் புனேவில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில்தான் சென்றாக வேண்டும் என்று அடம்பிடித்தார். அதில், எல்லா இருக்கைகளுமே ‘எகனாமி’ வகுப்பை சேர்ந்தவை. இருப்பினும், வேறு வழியின்றி அதில் பயணம் செய்தார். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கிய பிறகும், விமானத்தை விட்டு இறங்காமல் அமர்ந்திருந்தார்
தகவல் அறிந்து, ஏர் இந்தியா மேலாளர் சிவகுமார் (வயது 60) என்பவர், ரவீந்திர கெய்க்வாட் எம்.பி.யை அணுகி சமாதானப்படுத்த முயன்றார். அப்போது, ‘பிசினஸ்’ வகுப்பில் பயணிக்க முடியாத ஆத்திரத்தில், மேலாளரை அடித்து சட்டையை கிழித்தார் எம்.பி.. மூக்கு கண்ணாடியையும் நொறுக்கினார். தனது செருப்பால், மேலாளரின் கன்னத்தில் மாறி மாறி 25 தடவை அடித்தார்.
பிரதமர் மோடியிடம் புகார் கூறுவேன் என்று ஏர் இந்தியா ஊழியர் கூறியதால் அடித்ததாக அவர் செய்தியாளர்களிடம் விளக்கம் வேறு அளித்துள்ளார். இந்நிலையில் சுகுமாரனை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.>இந்த சம்பவத்தையடுத்து ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்ய எம்பிக்கு தடை விதித்துள்ளது அந்நிறுவனம். மேலும் அவரது அதிகார அத்துமீறல் குறித்து சிவசேனா தலைவர் உத்தாவ் தாக்கரே விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். சிவசேனா எம்பி மீது காவல்நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக