வியாழன், 2 பிப்ரவரி, 2017

தி.மு.க. பலவீனமாக இருக்கும் சில பிரிவுகள் .. திமுகவின் Think tank ஆலோசனைகள் ?

வனத்தையன் தமிழரிமா எழுத்துகளுக்கு salutes 💐 இந்த மாதிரி think tank தன்னை தானே சுய ஆராய்ச்சி செய்வது தான் #திமுக வின் பலமே ... இனி அவர் சொல்லும் வழிமொழிய வேண்டிய பலவீனம் என்று சொல்லி நிறுத்தி விடாமல் ., திருத்த வேண்டிய என்று முன்னுரையோடு :
*************
தி.மு.க. பலவீனமாக இருக்கும் சில பிரிவுகள் :
🔷 பெண்கள்:
தி.மு.க. எப்போதுமே பெண்கள் பார்வையில் தள்ளிவைத்தே பார்க்கப்படுகிறது. அதற்கு முதல் காரணம் தி.மு.க.வில் பெண்கள் கண்ணியமாக நடத்தப்படவில்லை என்பதே பலரின் குற்றச்சாட்டு.
எதிர்தரப்பு பெண்ணாக இருப்பதாலும், அவர்களை நம்மவர்கள் விமர்சிப்பதும் நமக்கு பலமல்ல... பலவீனமே ! நம் கட்சியில் பெண்களுக்கான இடம் மிகக் குறைவுதான். அப்படியே இருந்தாலும் அது கட்சி முன்னணியினரின் உறவினர் அல்லது கள்ளத் தொடர்பாளர்களாகவே இருப்பது வேதனை.
எல்லா துறைகளில் மட்டுமல்லாது , குடும்ப பாரத்தையும் சுமக்கும் நிலைக்கு பெண்கள் துணிந்து விட்ட நிலை அவர்கள் கண்ணியமாக நடத்தப் படுவது அவசியமாகிறது.
பெண்ணுக்கு சொத்துரிமை, மதுவிலக்கு என்பது மட்டுமே தி.மு.க. அவர்களுக்கு கொடுத்த மிகப்பெரிய உரிமைகள். அதைத் தாண்டி அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது மரியாதை மற்றும் கண்ணியமான நடத்தைகளை ...!!
🔷 காவல் துறை :
காவல் துறை பல்வேறு காலகட்டங்களில் தி.மு.க. வுக்கு எதிராகவே இருந்து வருகிறது. அதற்கு காரணம் கட்சி முன்னணியினர்களின் வரம்பு மீறிய தலையீடு.

காவல் துறைக்கு கழகம் எவ்வளவோ செய்திருந்தும் , அவர்கள் நமக்கு எதிராக செயல்பட காரணம் நம்மவர்களின் மிரட்டல் கலந்த அதிகாரம்தான். காவலர்களிடம் தி.மு.க.வினர் பணிந்து போவதில்லை. ஆனால் அ. தி.மு.க. வினர் பணிவின் சிகரங்கள்.
🔷 ஆத்திகர்கள்:
பெரியார்தான் நம் ஆசான் என்றாலும் , தமிழகத்தில் ஆன்மிகம் என்பது அழிந்து விட வில்லை. அதிலும் பெண்கள் ஆன்மிகத்தில் அமிழ்ந்து கிடக்கிறார்கள்.
இறையச்சம் மட்டுமே ஒழுக்கத்துக்கு வழி அமைக்கும் என்பதை சமுதாயம் நம்புவதாலும், கடவுள் மறுப்பாளர்கள் ஒழுக்க சீலர்களாக இல்லாததாலும் கடவுள் மறுப்புக் கொள்கை வெற்றி பெறவில்லை.
ஆதலால் ஆத்திகர்கள் நம்மை கண்டுகொள்வதில்லை. பதவிக்காக பா. ஜ. க. வோடு உறவுகொண்டது சரியா என்ற விமர்சனம் நம்மீது இன்னமும் இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது.
வாக்கு அரசியலில் வெகுமக்கள் விரும்புவதை எதிர்ப்பது நல்லதில்லை. நாம் கடவுள் மறுப்பாளராக இருப்பது தவறில்லை. அடுத்தவரின் கடவுள் பக்தியை நாம் விமர்சிக்க வேண்டாம். நம் வாழ்க்கை சிறப்பாக இருந்தால் நம்மை பின் பற்றுபவர்கள் எண்ணிக்கை தானே வளரும்.
🔷 நிரந்தர பதவிகள் :
ஒரு கட்சி வளர வேண்டுமானால் அக்கட்சியின் அனைத்து மட்டத்திலும் பதவிகள் பகிரப்பட வேண்டும். ஒருவரே ஒரு பதவியில் ஆயுள் வரை ஆக்கிரமித்து இருப்பது புதியவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப் பட காரணமாகி விடுகிறது.
ஒரு வேளை ஒருவர பதவி மாறினால் அந்த இடத்துக்கு முன்னவரின் பினாமியோ அல்லது உறவினர்களோ வருவது ஆரோக்கியமல்ல.
🔷 தமிழ் ஆர்வலர்கள் :
தமிழ் ஆர்வலர்களின் ஆதரவை தி.மு.க. இழந்ததற்கு காரணம் வசதியானவர்களுக்கு மட்டுமே பதவிகள் கொடுக்கப் பட்டு தமிழ் ஆர்வலர்கள் ஊறுகாயாக பயன்படுத்தப் படுவதை கற்றறிந்த அறிஞர்கள் விரும்பவில்லை.
நான் சொன்னது சரி என்றால் பாராட்டுங்கள். தவறு என்றால் மன்னித்து விடுங்கள்..!!  முகநூல் பதிவு  சவேரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக