வியாழன், 9 பிப்ரவரி, 2017

பாஜகவிடம் ஒட்டுமொத்த அதிமுகவும் சரணாகதி? கொல்லைபுற வழியாக RSS கசாப்பு கடைக்காரன் வந்தே விட்டான்!

நன்றி @Govi Lenin
பா.ஜ.க. ஆட்டி வைக்கிறபடி ஒ.பி.எஸ். செயல்படுகிறார் என்பது ஊரறிந்த ரகசியம். இந்த ஆட்டுவிக்கும் படலத்தை ஒ.பி.எஸ்ஸிடமிருந்து பா.ஜ.க தொடங்கவில்லை. ஜெ இருந்தபோதே தொடங்கிவிட்டது.
கரூர் அன்புநாதன் வீட்டில் பிடிபட்ட ஆம்புலன்சும் அதிலிருந்த கட்டுக் கட்டான பணமும் தோட்டத்தில் விளைந்தவை என்பதை பா.ஜ.க அரசு கண்டறிந்துவிட்டது. விளைந்ததை சரியான முறையில் விற்பதற்காக நியமிக்கப்பட்டவர்கள்தான் ஒ.பி.எஸ், நத்தம் விசுவநாதன், வைத்தியலிங்கம் உள்ளிட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
டுத்ததாக, சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாக திருப்பூரில் பிடிபட்ட 3 கண்டெய்னர்களின் ரகசியமும் டாக்குமெண்ட் ஆதாரங்களுடன் பா.ஜ.க அரசின் பிடியில் சிக்கிக் கொண்டது. இப்படி சிக்கியவர் ஒ.பி.எஸ் மட்டுமல்ல, அவரது அம்மாம்மாக்களும்தான். சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தொடங்கி அடுத்தடுத்த நடவடிக்கைகள் அனைத்திலும் பா.ஜ.க.வின் கையில் இவர்கள் அனைவரின் குடுமிகளும் சிக்கின.
மாநில உரிமைப் போராளியாக வேடம் போட்டு வந்த ஜெயலலிதா, உதய் திட்டத்திற்காக இறங்கி வந்தததில் தொடங்கி அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட்டாகும் சூழல்- சேகர் ரெட்டி வீட்டில் நடந்த ரெய்டு வரை தோண்டப்பட வேண்டிய ரகசியங்கள் ஏராளமாக உள்ளன.
ஜெயலலிதா கூந்தல் என்றால் அதை மோடி-அருண்ஜெட்லி போன்றவர்கள் வாயிலாகவும், சசிகலா கூந்தல் என்றால் வெங்கையா நாயுடு-சுப்ரமணிய சாமி போன்றவர்கள் மூலமாகவும், ஒ.பி.எஸ் குடுமி என்றால் கவர்னரை வைத்தும் கையாள்வது பா.ஜ.க.வின் வாடிக்கை.
அ.தி.மு.கவே ஒட்டுமொத்தமாக பா.ஜகவிடம் சரணாகதி அடைந்த நிலையில், ஒ.பி.எஸ் ஏதோ இந்துத்வா கொள்கைகளை நட்டு வளர்ப்பவர் போலவும், சசிகலா அதை முறியடிக்க வந்த திராவிட வீராங்கனை போலவும் நினைத்து கம்பு சுற்றுவது நமக்கு நாமே ஏமாறும் திட்டமாகும்.

தி.பி.2048 தை 27  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக