வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை (MADP)’துவக்கம் - கொடி அறிமுகம்! ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் : தீபா பேட்டி

M A D   Peravai ?  So Sweet
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதிலும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை (MADP)என்ற புதிய அமைப்பை துவங்கினார். இதையடுத்து, பேரவையின் கொடியையும் அறிமுகம் செய்தார். கறுப்பு சிவப்பு கொடியின் நடுவில் எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா செங்கோல் வழங்கும் படம் இடம்பெற்றுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதிலும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை (MADP)என்ற புதிய அமைப்பை துவங்கினார்.
இதையடுத்து, பேரவையின் கொடியையும் அறிமுகம் செய்தார். கறுப்பு சிவப்பு கொடியின் நடுவில் எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா செங்கோல் வழங்கும் படம் இடம்பெற்றுள்ளது. பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘’எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பு துவங்கியுள்ளேன். இயந்த இயக்கம் மாபெரும் வெற்றிபெரும் என்று நம்புகிறேன். ஜெயலலிதா பிறந்தநாளில் அரசியல் பயணத்தை துவங்குவதில் பெருமை கொள்கிறேன். ஜெயலலிதாவின் விட்டுச்சென்ற பணிகளை நான் தொடர்வேன். மக்கள் விரும்பியதால் அரசியலுக்கு வந்தேன். மரியாதை நிமித்தமாக பன்னீர்செல்வத்தை சந்தித்தேன். தீபக்கின் நிலைப்பாடு தெளிவற்ற நிலையில் உள்ளது. பேரவையின் பொருளாளராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன். உள்ளாட்சி தேர்தலிலும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை போட்டியிடும்’’ என்று தெரிவித்தார். நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக