சனி, 18 பிப்ரவரி, 2017

DissolveTNGovt.. சட்டவிரோத வாக்கெடுப்பு ? மக்கள் கொந்தளிப்பு !

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசு
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும் தமிழக மக்களிடம் தோல்வியடைந்து விட்டது. எனவே ஆளுநர் அரசை கலைக்க வேண்டும் என்று
சமூகவலைத்தளங்களில் மக்கள் பதிவிட்டு வருகின்றனர். தமிழக அரசியல் களம் கடும் போர்களமாக மாறியுள்ளது. ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என பிளவு பட்டுள்ளது. ஓபிஎஸ்க்கு ஆதரவாக 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில் அடைக்கப்பட்டனர். 10 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு வியாழக்கிழமையன்று தமிழக முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிச்சாமி.

சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கு கோரினார். திமுக, காங்கிரஸ் உறுப்பினர் சபையில் இல்லாத நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர்.


எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும் அவர் மக்கள் மனதில் தோற்றுவிட்டார் என்றே கூறவேண்டும். ஆட்சியை கலைக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். #DissolveTNGovt என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. ஆளுநருக்கு மெயில் ஆட்சியைக் கலைக்க கோரியும், மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் ஒரு வலைஞர் மெயில் அனுப்பியுள்ளார். எம்எல்ஏக்களுக்கு சங்குதான் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும் அதிமுக எம்எல்ஏக்கள் தொகுதி பக்கம் போனால் அவர்களுக்கு சங்குதான் என்று சொல்லாமல் சொல்கிறார் ஒரு வலைஞர்.

மறு தேர்தல் ஜல்லிக்கட்டு நடத்திய நமக்கு மறுதேர்தல் நடத்த வைக்க முடியாதா என்று கேட்டுள்ளார் ஒரு வலைஞர். சட்டத்திருத்தம் முதல்வர் இறந்து விட்டால் வேறு முதல்வரை தேர்தெடுக்காமல் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார் ஒரு வலைஞர். மக்கள் மனதில் தோல்வி சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி ஜெயித்தாலும் பல கோடி மக்கள் மனதில் தோல்வியடைந்து விட்டார். அதன் வெளிப்பாடுதான் சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பாக வெளிப்படுகிறது. அரசை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சி கொண்டு வாங்க என்கின்றனர் வெப்துனியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக