சனி, 4 பிப்ரவரி, 2017

பஞ்சாப் கோவா சட்டமன்ற தேர்தல் இன்று .. பஞ்சாபில் பாஜகவுக்கு மரண அடி??? மார்கண்டேய கட்ஜு .

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று முன்தினம் மாலையுடன் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்த நிலையில், கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 403 தொகுதிகள் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு வருகிற 11ஆம் தேதி தொடங்குகிறது. மணிப்பூரில் மார்ச் 4, மற்றும் 8ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் வருகிற 15ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்திலும், 40 தொகுதிகள் அடங்கிய கோவாவிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதனையொட்டி இரு மாநிலங்களிலும் , இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. ரூபாய் நோட்டு நடவடிக்கை இந்த தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக