சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அவரது வீட்டில் வைத்து மருத்துவப் பரிசோதனை நடந்துள்ளது.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு திடீரென சென்னை கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்து திடீர் தியானத்தில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் அவர் தியானம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரியான புகார்களை அவர் தெரிவித்தார்.
அவரது பேட்டி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பி விட்டு விட்டது. இரவு முழுவதும் தமிழகம் தூங்காமல் தவித்தது. அதிமுக தொண்டர்கள் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக இரவோடு இரவாக திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஓ.பன்னீர் செல்வமும் இரவு முழுவதும் தூங்கவில்லை.
இரவு முழுவதும் அவரது வீட்டில் ஆதரவாளர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தொண்டர்கள் வீட்டுக்கு வெளியே தொடர்ந்து குவிந்திருந்தனர்.
இந்த நிலையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மருத்துவப் பரிசோதனை நடந்துள்ளது. வீட்டிலேயே மருத்துவப் பரிசோதனை நடந்தது. இரவு முழுவதும் ஓ.பி.எஸ் தூங்கவில்லை என்பதால் அவரது ரத்த அழுத்தம் உள்ளிட்டவை பரிசோதித்துப் பார்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.tamiloneindia

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக