திங்கள், 6 பிப்ரவரி, 2017

முலாயம் சிங் யாதவ் லோக்தால் , சமாஜ்வாதி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் பிரசாரம் செய்வார்


உத்திர பிரதேச தேர்தலில் போட்டியிடும் இரண்டு கட்சிகளுக்கு முலாயம் சிங் யாதவ் பிரச்சார செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சமாஜ்வாதி கட்சிக்கு முலாயம் பிரச்சாரம் செய்வார் என அகிலேஷ் யாதவ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், லோக் தால் கட்சியும் முலாயம் சிங்கை தங்கள் கட்சியின் நட்சத்திர பிரச்சாரகர் என அறிவித்திருக்கிறது.
லோக் தால் கட்சி தலைவர் சுனில் சிங், முலாயமிடம் இருந்து அனுமதி பெற்றதாக தெரிவித்திருக்கிறார். லோக் தால் கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்வதாக முலாயம் உறுதி அளித்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.சட்டசபை தேர்தலில் லோக் தால் கட்சி சமாஜ்வாதிக்கு போட்டி கட்சி என்பதால், சமாஜ்வாதி இது குறித்து எதுவும் தெரிவித்திருக்கவில்லை.

ஃபெப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கி தான் குறிப்பிட்ட வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்யவிருப்பதாக முலாயம் சிங் தெரிவித்தார். முதலில் தன் சகோதரர் ஷிவ்பால் யாதவிற்கு பிரச்சாரம் செய்ய எடாவா செல்லவிருப்பதாக அவர் தெரிவித்தார். சமாஜ்வாதி தலைவர் அசாம் கானிற்காகவும் முலாயம் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், அரசியலில் நுழையும் தன் மருமகள் அபர்ணா யாதவிற்காகவும் முலாயம் பிரச்சாரம் செய்யவிருக்கிறார்.
ஆக்ராவில் பேசிய அகிலேஷ் யாதவ், “ சமாஜ்வாதி கட்சி நேதாஜியால் (முலாயம்) தான் தொடங்கப்பட்டது. கட்சி இருப்பத்தைந்து வருடங்கள் வாழ்ந்திருக்கிறது.மேலும் இருப்பத்தைந்து வருடங்கள் நிறைவு செய்வதை பார்க்க நேதாஜி இருப்பார். கட்சிக்குள் இப்போது எந்த முரண்பாடுகளும் இல்லை. சில விஷயங்களில் நான் வலிமையான நிலைப்பாடு எடுக்க வேண்டியிருந்தது. இப்போது மோதல்,தேர்தல் களத்தில் மட்டும் தான்” என தெரிவித்திருந்தார்.  மின்னப்மலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக