புதன், 8 பிப்ரவரி, 2017

கங்கையை சுத்தபடுத்த மக்களின் பணத்தை வீணடித்தது போதும் .. பசுமை தீர்ப்பாயம் கண்டனம்!

மின்னம்பலம் : பொதுமக்கள் பணத்தை வீணாக்கியது போதும்: தேசிய பசுமை தீர்ப்பாயம்! கங்கை நதியை தூய்மைப் படுத்துவதாகக் கூறி பொதுப் பணத்தை வீணடிக்கிறார்கள் என தேசிய பசுமை தீர்ப்பாயம் விமர்சித்துள்ளது.
கடந்த ஆண்டு கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக, 300 திட்டங்களின் ஒருங்கிணைப்புத் திட்டமான ‘நமாமி கங்கா’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.ஆனால், இதுவரை கங்கை நீரை ஒரு துளிக் கூட தூய்மைப்படுத்தவில்லை, பதிலாக பொதுப் பணத்தை வீணடிக்கிறார்கள் என்று பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை நீதிபதி ஸ்வதந்தர் குமார், அனைத்து முகவர்களும் இணைந்து கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தை செயல்ப்படுத்த வேண்டும். மேலும்,பிரதமர் ஒர் குறிக்கோளை கொடுத்திருக்கிறார். அதை, தேசிய திட்டமாக கருத வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கங்கை நதியை தூய்மைப்படுத்தாது மத்திய மாசு கட்டுபாடு வாரியம் மற்றும் மற்ற அரசு நிறுவனங்களின் தவறாகும். அவர்களுடைய வேலையை சரியாக செய்யவில்லை. இதுவரை கங்கையை தூய்மைப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், மக்களின் பணத்தை வீணாக செலவழிக்கிறார்கள். கங்கையை தூய்மைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அனைவருமே தெரிவித்துள்ளனர். ஆனால், உண்மையில் ஒரு துளி கங்கை நீர் கூட தூய்மைப்படுத்தப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தொடர்ந்து நடந்து வரும் நாடகத்தை நாங்கள் நம்ப தயாராக இல்லை. அதனால்,‘நமாமி கங்கா’ திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த போகிறீர்கள் என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
‘நமாமி கங்கா’ திட்டத்தின் கீழ் கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்கு மத்திய அரசு ரூ.2,000 கோடி ஒதுக்கியுள்ளது. மேலும், பிஜ்னோர் மற்றும் அம்ரோகா மாவட்டங்களிலுள்ள 14 தொழிற்சாலை யூனிட்கள் கங்கையை மாசுப்படுத்துவதால், அவற்றை மூடும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அந்த தொழிற்சாலைகள் கழிவுகள் நதியில் கலக்கவில்லை என அனைவரும் தெரிவிக்கின்றனர். எனவே, நான்கு நாட்களில் அதற்கான பதிலை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது நாங்களே அனைத்து தொழிற்சாலைகளையும் மூடி விடுவோம். சமையல் கதைகளை நிறுத்துங்கள். அதற்கான விளைவுகளை சந்திக்க தயாராக இருங்கள். கங்கை நதியை மாசுப்படுத்தும் தொழிற்சாலைகளை மூட ஏன் இன்னும் உத்தரவிடவில்லை என்பதற்கான காரணத்தை ஒரு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக