வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

எழுத்தாளர் கா.சீ.சிவகுமார் காலமானார்

Image may contain: 1 person, textகா.சீ.சிவகுமார் இனி நம்முடன் இல்லை என்பதை மனம் ஏற்க மறுத்தாலும், மனம் அலைபாய்ந்து 25 ஆண்டுகளுக்கு முன்பு செல்கிறது. மதுரை நகரத்தில் மினி பஸ் நடத்துனராக, தள்ளு வண்டியில் பொருட்கள் விற்பவராக, தெரு தெருவாக ஜவுளி வியாபாரம் செய்பவராக என் நண்பன் எனக்கு அறிமுகமானான். 1993ல் பார்த்த அதே புன்னகை, அதே பிரியம், அதே வசீகரம், அதே தெனாவட்டு, அதே விட்டேத்தியுடன் திரிந்த அலாதியான மனிதன். இலக்கிய சூழலில் எதிரிகள் இல்லாதவர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது க.சீ.சிவக்குமார் மட்டுமே. கா.சீ யார் மீது வெறுப்பு கொண்டதில்லை, யார் பற்றியும் புறம் பேச மாட்டான். அவனால் யார் மீது அன்புகொள்ள முடியும், யார் மீதும் இறக்கம் கொள்ள முடியும். கா.சீ ஒரு கணமும் Material-ஆக இருந்ததில்லை, பணம்-காலம் எல்லாம் அவனிடத்தில் மதிப்பு கோரி பிட்சை எடுத்து நின்றது.

அவன் அவனாகவே இருந்தான், காற்றை போல் அலைந்தான், காற்றை போல் பொதுவானாக இருந்தான், அவன் எழுத்தில் வார்த்த மனிதனுக்கும் அவனுக்கு எள் அளவும் வித்தியாசமில்லை. அவன் தான் அவனது இலக்கியம், இலக்கியம் தான் அவன் வாழ்வு. இலக்கியமாகவே வாழ்பவனுக்கு ஏற்படும் எல்லா நெருக்கடிகளையும் சந்தித்து அதை புன்னகையுடன் கடந்து சென்றான். அவனை சுற்றி இருக்கும் பலருக்கு உதவினான், அடுத்த நாளை பற்றி கனவுகள் அற்று அடுத்த நொடியை கூட திட்டமிடாத அவனது துனிச்சல் நம் யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை. குறத்தி முடுக்கின் கல் சந்திகளில் திரிந்த மகத்தான கலைஞனாக அவன் தமிழ் இலக்கியத்தின் நிரந்தர கல்வெட்டாக திகழ்வான்.  முகநூல் பதிவு முத்துகிருஷ்ணன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக