ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

பன்னீரும் பழனியும் பாஜக கண்ட்ரோலில் மகிழ்ச்சி! சு.சாமியும் கோபாலசாமியும் ஒண்ணா தொழில் பண்றாய்ங்க ..

எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்பிற்கு முன் நடந்த சில திரைமறைவு பேச்சுவார்த்தைகள் வெளிவந்துள்ளன. சசிகலாவிற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு உள்ளது, அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள தயாரா என ஒரு மத்திய அமைச்சர் பேச்சுக் கொடுக்க, அவர்கள் தான் என்னை வளர்த்துவிட்டவர்கள் அவர்களுக்கு எதிராக எப்படி பேச முடியும் என்ற பன்னீர் செல்வத்தின் பதிலால் திகிலடைந்த மத்திய அமைச்சர் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நாயகனை வழிக்கு கொண்டுவந்து விட்டாராம். தனக்கு 50 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உண்டு என பன்னீர் தெரிவிக்க, பிறகு என்ன பார்த்துக் கொள்ளலாம் என மெரினா நாடகம் அரங்கேறியுள்ளது. அந்த இரவு சசிகலா எடுத்த அதிரடி ஆக்ஷன் தான் ஆட்டத்தை மாற்றியுள்ளது. பன்னீரின் நடவடிக்கையால் சுதாரித்துக் கொண்ட மன்னார் குடி சொந்தங்கள் பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்களை கார்டனுக்கு அழைத்து, அங்கேயே வைத்துக் கொண்டது.

 இது தெரியாமல் கடற்கரையில் அதிரடி காட்டிய பன்னீர் செல்வத்தால், கடைசியாக சட்டமன்றத்தில் தான் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை பார்க்க முடியாது. பலரின் மனம் மாறிவிட்டதால், மீண்டும் பன்னீருக்கு அவர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. கூவத்தூரில் இருந்து எம்.எல்.ஏக்களை வெளியேற்ற முயன்று மத்திய அரசு தோல்வி கண்ட தருணத்தில் நடராஜனின் சகோதரர் சு.சாமியை சந்திக்க, அவரோ பிரதமரை சந்திக்க, சில கட்டுப்பாடுகளை ஏற்கத் தயாரா என கேட்க, அதற்கு சம்மதம் தெரிவிக்கப்படுகிறது. இதன் பிறகு எடப்பாடிக்கு கிரீன் சிக்னல் ஆளுநர் மாளிகையால் காட்டப்பட்டதாம். ஆக பன்னீர் என்ற குதிரையை கழற்றி விட்டு, எடப்பாடி என்ற குதிரை மீது மத்திய அரசு பயணிக்கத் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.  லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக