ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

திருவண்ணாமலையில் அதிமுக பிரமுகர் கனகராஜ் வெட்டி கொலை ! கோவில் முன் இடம்பெற்ற கொடுரம் ...

திருவண்ணாமலை நகரம் அதிமுகவின் நகர செயலாளராக 20 ஆண்டுகள் இருந்தவர் கனகராஜ். தற்போது மாவட்ட கூட்டுறவு சங்க தலைவராகவும் உள்ளார்.
ADMK man hacked to death by gang in Thiruvannamalai திருவண்ணாமலை: அதிமுக பிரமுகர் கனகராஜ் என்பவரை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் நகர்மன்ற தலைவராக செயலாற்றியவர் அதிமுகவைச் சேர்ந்த கனகராஜ். இவர் வழக்கம் போல் வெளியே சென்றுவிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது, 2 சக்கர வாகனத்தில் 3 பேர் வந்து திடீரென அவரை வழி மறித்துள்ளனர். திடுக்கிட்டு நின்ற கனகராஜை முகமூடி அணிந்த 3 பேரும் சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். கண் இமைக்கும் நேரத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன் நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக பிரமுகர் ஏன் கொல்லப்பட்டார், மர்ம நபர்கள் யார், அதிமுகவில் தற்போது நடந்து வரும் அதிகாரப் போட்டிக்கும் இந்த சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். tamiloneindia

நக்கீரன் :  திருவண்ணாமலை நகரம் அதிமுகவின் நகர செயலாளராக 20 ஆண்டுகள் இருந்தவர் கனகராஜ். தற்போது மாவட்ட கூட்டுறவு சங்க தலைவராகவும் உள்ளார். இவர் இன்று காலை 6 மணி அளவில் தனது ஓட்டுநருடன் இருசக்கர வாகனத்தில் பேட்மிட்டன் விளையாட அண்ணாமலையார் கோவில் மாடவீதி வழியாக சென்றுகொண்டிருந்தார். திருமஞ்சன கோபுரம் அருகே 3 பேர் அவரது வாகனத்தை மறித்துள்ளனர். அவர்கள் கையில் அரிவாள் வைத்திருப்பதை பார்த்ததும் வண்டி ஓட்டிய குமார் என்பவர், வண்டியை திருப்பியுள்ளார். ஆனால் அந்த 3 பேர் அவரை மடக்கி அரிவாளால் முதலில் ஓட்டுநரை வெட்டியுள்ளனர். அதன் பின்னர் கனகராஜை வெட்டியுள்ளனர். கனகராஜின் கழுத்து, இடது தோள்பட்டை, வயிறு என 3 இடங்களில் மிகக் கொடுரமாக வெட்டியுள்ளனர். சம்பவ இடத்திலேயே கனகராஜ் உயிர் பிரிந்தது. குமார் உயிருக்கு போராடிய நிலையல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வெட்டிய 3 பேரும் அங்கிருந்து தப்பியோடினர். கனகராஜ் அதிமுகவில் பெரிய ஆதரவாளர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர். இதனால் திருவண்ணாமலையில் பெரும் பதட்டமாக உள்ளது. கனகராஜ் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அங்கு திரண்டுள்ளதால் போலீசார் நகரம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் கனகராஜினி வலதுகரமாக திகழ்ந்த பங்க் பாபு, சரவணன் உள்பட 3 பேர் திருவண்ணாமலை நகர காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர். கனகராஜை வெட்டப்பட்ட அரிவாள், கொலைக்கு பயன்படுத்திய ஸ்கார்பியோ கார் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கொலை செய்வதற்கான காரணமாக, பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு என கூறப்படுகிறது. பங்க் பாபு சமீபத்தில் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர். அவரை வழி அனுப்பி வைத்தது. அவருக்கு தேவையான பண உதவிகள் செய்தது கனகராஜ்தான். திமுகவில் தனக்கு நம்பகமான ஒரு நபர் இருக்க வேண்டும் என்பதற்காகவே பங்க் பாபுவுக்கு இதனை செய்துள்ளார். பங்க் பாபு திமுகவுக்கு சென்றாலும், கனகராஜின் பணம் கொடுக்கல், வாங்கல் முதல்வரை கட்டப் பஞ்சாயத்து வரை முன்பு நின்று செய்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக