திங்கள், 27 பிப்ரவரி, 2017

நெடுவாசல் போராட்டம் ! திமுக ரகுபதியை தடுத்தவர்கள் பின்னணியில் தீயசக்திகள்?


நெடுவாசல் உரிமை போராட்டத்தை அனைத்து திமுக வினரும் உளமார ஆதரிக்கிறார்கள்...அதில் பங்கேற்றுவருகிறார்கள்.....உண்மை அப்படி இருக்க... போராட்டத்தில் பங்கேற்றுள்ள சிலர் ...திமுக எம் எல் ஏ வை உள்ளே வரக்கூடாது என்று தடுத்திருக்கிறார்கள்... இது நியாயமா ? சரத்குமார் கட்சி இன்னும் பல திரைப்பட துறையினர் ...பல கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட பொது மக்களின் போராட்டத்துக்கு திமுக ஆதரவளிப்பது குற்றமா ? போராட்டக்காரர்களுக்கு திமுக மீது அப்படி என்ன வன்மம்? மக்கள் பிரச்சினை எதுவானாலும் முதலில் குரல் கொடுத்து மக்கள் கவனத்தை...அரசின் கவனத்தை ஈர்ப்பது திமுக தானே... கூட்டம் சேர்ந்த பிறகு ஒரு அறிக்கை விட்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் ஈனபுத்தி கொண்ட கட்சி அல்லவே திமுக .. திட்டமிட்டு திமுகவை விலக்கியத்தால் தான் இன்று கிரிமினல்கள் பினாமி ஆட்சி நடக்கிறது ...என்பதை இந்த முற்போக்குவாதிகள் ? எப்போது புரிந்துகொள்வார்கள்.? தமிழர்களை ஒன்று சேரவிடாமல் தடுப்பதில் யாரையுடைய சதி? தமிழ் இளைஞர்கள் மாணவர்கள் பொதுமக்கள் தொடர்ந்து சுயநலவாதிகளின் பொய்யில் மயங்கி ஏமாந்துகொண்டே இருக்காமல் உண்மையை உணர வேண்டும். முகநூல் பதிவு சென்னை தாமோதரன் .

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும்நிலையில், அதில் கலந்துகொள்வதற்காகச் சென்ற திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதியை பொதுமக்கள் தடுத்தனர்.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு ரத்துசெய்ய வலியுறுத்தி, உரிமை மீட்புக் குழு, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் கூட்டியக்கம் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்று வருகிறது.
அப்போது இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் மத்திய, மாநில அமைச்சரும், தற்போதைய திமுக எம்.எல்.ஏ.,வுமான ரகுபதி கலந்துகொள்வதற்காக பந்தலுக்குள் வந்து அமர்ந்தார். உடனே உண்ணாவிரதப் போராட்டக்காரர்கள் அவரிடம், நீங்கள் மத்திய அமைச்சராக முன்பு இருந்தபோதுதானே இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு மக்களைப் பற்றியும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் சிந்திக்காமல், இப்போது அரசியல் செய்வதற்காக இங்கு கலந்துகொள்ள வருகிறீர்களா என்று கோபமாகப் பேசினர். மேலும் நீங்களாக இங்கிருந்து சென்றுவிட்டால்தான் நல்லது என்று கூறினர் .அதையடுத்து, அங்கிருந்து ரகுபதி எம்.எல்.ஏ., கிளம்பிச் சென்றார். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக