திங்கள், 20 பிப்ரவரி, 2017

மலையாள திரையுலகத்தினர் ஆர்ப்பாட்டம் .. நடிகை பாவனா கடத்தலுக்கு ...

; நடிகை பாவனா கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மலையாளத் திரையுலகினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏராளமான இளம் நடிகைகள் இச்சம்பவத்தால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது போன்ற சம்பவம் யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம் என நடிகை மியா ஜார்ஜ் உள்பட பலர் அச்சம் தெரிவித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான மம்முட்டி, திலீப், ஜெயசூர்யா, மஞ்சுவாரியார் உள்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாதவகையில் பெண்களுக்கும் நடிகைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி காவல்துறையினரை வலியுறுத்தினர் பாலிமர் நியுஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக