செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

ஜெயா இறப்பு கொலை என்றால்? முதல் குற்றவாளி மத்திய அரசு .. இரண்டாவது இடத்தில்தான் சசிகலா ! மூன்றாவது மாநில அரசு .. பன்னீர்செல்வம் ,.... ..

ஜெயா மரணத்தில் மர்மம் இருந்தால் அதில் முதல் குற்றவாளி மத்திய அரசு தான். ஏனென்றால் அவர்கள் தான் மருத்துவர்களை மட்டுமல்லாமல் எல்லோரையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்தவர்கள். வெங்கய்யா நாயுடு மர்மம் இல்லை என்கிறார். இந்த அரசியல் சூழலில் வாய் திறக்க மாட்டார்கள். ஆனால் இன்று அதிமுகவை சுக்கு நூறாக்குவோம் என்று சொன்னதை திமுகவும் கவனிக்க வேண்டும். பீஹாரின் மாஞ்சிக்களை தமிழகத்தில் உருவாக்க நினைக்கிறது பாஜக. எம்பிக்களை தில்லியில் குதிரை பேரம் பேசி அனுப்பிக் கொண்டிருப்பதை வெற்றிகரமாகச் செய்கிறார்கள். ஆனால் MLAக்கள் வரும்வரை காத்திரு என்று சொல்கிறார்கள். பாஜக இந்தச் செயலில் ஈடுபடவில்லை என்று நம்புபவர்கள் அரசியலில் அடிமுட்டாள்கள். சசிகலா கொள்ளைக்காரி என்பதால் அவர்களுக்கு இந்தக் கோபமில்லை. வழக்கில் இருந்தும் விடுதலை ஆனால் தாங்கள் தேடிய அடிமை கிடைக்க மாட்டார் என்கிற விரக்தியில் செயல்படுகிறார்கள். டயர் நக்கிய பன்னீர் செல்வமெல்லாம் சுயமரியாதை பற்றி பேசத் தகுதியற்றவர். நம்பர் டூ என்பதை அடைவதற்காக இப்போது ஏரோப்ளேன்டயரை நக்க காத்திருக்கிறார்.

பாஜகவின் இந்த விளையாட்டில் விஸ்வரூபமெடுத்த உன்னைப்போல் ஒருவன் எடுத்த கமலஹாசன் நிற்கிறார், மற்றும் அவரின் உறவினரெல்லாம் நிற்கிறார்கள்.
பாஜகவின் உதவி இல்லாமல் பன்னீர் செல்வம் நின்றிருந்தால் என்னுடைய ஆதரவு அவருக்குத் தான். அதிகாரத்தில் எப்போதும் இருக்கும் பிராமணியத்தைப் பிடித்து ஆட்சிக்கு வரமுடியாவிட்டாலும் ஆட்சியைக் கலைத்துக் கொடுக்கும் வேலைக்காக மட்டுமே பயன்படும் பன்னீர் ஒரு மோசமான முன்னுதாரணம்.
அவர் பெரும்பான்மையை நிரூபிக்க அவசரம் காட்டவில்லை. பாஜகவிடம் பேசி காலம் தாழ்த்துகிறார். எனவே அவருடைய நோக்கம் ஆட்சிக்கு வருவதல்ல.
ஜெயாவின் காலில் விழ பல யோகாசனங்களைப் போட்ட பன்னீர் இப்போது தியானத்தில் பாஜகவின் நாடகத்தன் நிறைவுக் காட்சியில் நிற்கிறார். பாஜகவின் நேரடி ஆட்சி வரமுடியாதே என்று பலர் சொல்கிறார்கள். அது எப்போதும் வராது. ஆனால் பன்னீர் தான் பெரிய கதவைத் திறந்துவிட்டுள்ளார். சட்டப்படி நடக்க முடியாததால் பன்னீரின் உதவியை நாடிய மத்திய அரசு கொலைப்பழியை சசி மட்டுமே சுமக்கச் செய்து விளையாடுகிறது. உண்மையில் எனக்கு மோதி மேல் தான் சந்தேகம். அரசியலைத் தாண்டி தன்னுடைய தோழி எழுபது நாட்களில் ஒரு நாள் கூடவா வர முடியவில்லை. அவர் வந்திருந்தால் சசி தடுத்திருக்க முடியாதே. இசட் பிரிவை விலக்க மத்திய அரசின் ஒப்புதல் வேண்டுமாமே. அப்படியென்றால் மோதிக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது. உயிர் விசயங்களில் மோதியை நான் நம்புவதே இல்லை.
சசிகலாவின் மாபியா இமேஜை டிஜிட்டலாக வளர்த்தெடுத்தது வசதியாகிவிட்டது. எப்போதும் ஜெயா தான் முதல் குற்றவாளி என்பதை ஏற்றுக் கொண்டு தான் சசிகலாவை பற்றி பேச வேண்டும்.
கடைசியாக பத்ரி ஞானி அவர்கள் எந்தப் பக்கமோ அதற்கு எதிர் பக்கம் நிற்பதே நியாயம் என்று உள்ளுணர்வு சொல்கிறது. தவறாகவும் இருக்கலாம். எனக்கு சுடுகாட்டில் தியானம் பண்ண வராது.
முகநூல் பதிவு Elango Kallanai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக