சனி, 18 பிப்ரவரி, 2017

போலீசாருடன் ஸ்டாலின் வாக்குவாதம்.. திமுகவினர் கார்களை தடுத்த போலீஸ்!

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் மீது சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வந்தனர். அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் காரை பேரவைக்குள் செல்ல அனுமதிக்க போலீசார் தடுத்தனர். இதனால் மு.க.ஸ்டாலின் காவல்துறையினருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டார். மேலும் சில திமுகவினரின் கார்களை போலீசார் தடுத்தனர். அவர்களுக்காகவும் ஸ்டாலின் வாக்குவாத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக