செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

ராதாரவி : இப்போதுதான் அதிமுகவே கிடையாதே ... நான் நம்பி இருந்தவர் இறந்துவிட்டார்!

நான் நம்பி இருந்தவர் இறந்துவிட்டார்: அண்ணா அறிவாலயம் முன்பு ராதாரவி பேட்டி திரைப்பட நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான நடிகர் ராதாரவி திமுகவில் இன்று காலை இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் சகோதரர் தளபதி ஸ்டாலினை விட்டால் ஆள் கிடையாது. நான் ஏற்கனவே திமுகவில் இணைய வேண்டும் என்று சொல்லிக்கொண்டுதான் இருந்தேன். இது சேகர்பாபு, வாகை சந்திரசேகர் போன்றவர்களுக்கு தெரியும். நான் நம்பி இருந்தவர் இறந்துவிட்டார். அவரைப் பற்றி நான் பிறகு பேசுகிறேன். நாளைக்கு தங்க சாலையில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறேன். அங்கு எனது கருத்துக்களை சொல்ல இருக்கிறேன்.

நான் பதவிக்கு ஆசைப்படுபவன் அல்ல. எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவில் வந்து சேர்ந்திருக்கிறேன். ஏனென்றால் நாளைக்கு இது ஆளும் கட்சியாக மாறும். உறுதியாக இருக்கிறேன். இனிவரும் காலத்தில் திமுக மட்டும்தான் வெற்றி பெறும். வெற்றி நமதே.
நான் சேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. என்னைப்போல நிறைய பேர் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
 கேள்வி : உங்களைப்போல நிறைய பேர் வருவதற்கான வாய்ப்பு இருக்கா பதில் : நிச்சயமாக இருக்கு
கேள்வி : யார், யார் என சொல்ல முடியுமா பதில் : யார் யார் என சொல்ல முடியாது, ஆனால் நிச்சயமாக வாய்ப்பு இருக்கு
கேள்வி : நீங்கள் வருவதற்கான முக்கிய காரணம் என்ன பதில் : முக்கிய காரணம் இதுதான். தமிழ்நாட்டுக்கு தகுதியுடைய தலைவர் யார் இருக்கிறார்கள்.
இவரைப் போல அரசியலில் ஊறிய மனிதனைச் சொல்லுங்கள்.
கேள்வி : அதிமுகவில் இருந்து யார் வருவார்கள் பதில் : நிறைய பேர் வருவார்கள்.
இப்போதுதான் அதிமுக கிடையாதே. ஆகையால் அதிமுகவில் இருந்து வருவார்கள் என்று சொல்லாதீர்கள். பொதுமக்களாக வருவார்கள் நிறைய பேர். இவ்வாறு கூறினார். நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக