சனி, 25 பிப்ரவரி, 2017

எதிர்க்கட்சிகள் மொத்தமாக ராஜினாமா? ஆர்.நடராஜன் .. அமெரிக்க தூதரக முன்னாள் அதிகாரி!

ஸ்டாலின் சோனியா பேச்சுவார்த்தை ?  
எம்.எல்.ஏ.க்களை இனி மக்கள் பிரதிநிதிகள் என்று அழைப்பது தவறு, -குறிப்பாக இப்போதைய ஆளும் தரப்பு அ.இ.அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை. இவர்கள் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கவில்லை. அடைத்து வைக்கப்பட்டதற்கு இசைந்ததன் மூலமும்  சட்ட மன்றத்தில் சுதந்திரமாக வாக் களிக்க முடியாமல் போனதன் மூலமும்  தாங்கள் சசிகலா வின் ஏஜெண்டுகள் என்பதை நிரூபித்துவிட்டார்கள். அதுமட்டுல்ல; இப்படிச்  சிறைப்பட்டவர்களில் ஒருவரிடம் "நீங்கள் மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப நடந்து கொள்ளவில்லை போலிருக் கிறதே' என்று கேட்டதற்கு அவர் ரொம்பவும் திமிராக "எம்.எல்.ஏ., என்பதனால்  நான்தான்  மக்கள்' என்றார்
-"நானே ராஜ்யம்' என்று ஒரு ஃப்ரெஞ்சு மன்னன் சொன்னதுபோல. ;இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் "இன்னார் வரவேண்டும்' என்று மக்கள் கருத்து தெரிவித்ததுண்டு. "சிலர் வரவேண்டாம்' என்பதைப் போட்டி அரசியல்வாதி களும் பத்திரிகை ஆசிரியர்களும் சொன்னார்களே யொழிய... மக்களின் ஒட்டுமொத்தமான கருத்து, குறிப் பிட்ட ஒரு நபருக்கு எதிர்ப்பாக வெளிப்பட்டது சசிகலா விவகாரத்தில்தான். இக்கட்டான சமயங்களில் தங்கள் எண்ணத்தைப் பிரதிபலிக்காத  பிரதிநிதிகளை மக்கள் வெறுக்கிறார்கள். அந்த வெறுப்பை, கோபத்தை உக்கிரமாக வெளிப்படுத்துகிறார்கள் என்பது நம் அரசியல் வரலாற்றின் புதிய போக்கு. இது வரவேற்கத்தக்கது.

ஜெயலலிதா காலத்தில் பிடித்தோ பிடிக்காமலோ சசிகலாவை ஏற்ற அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் தங்கள் தலைவியின் மரணத்திற்கே அவர்தான் காரணம் என நினைப்பதால் அவர் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக் கப்படுவதை மூர்க்கமாக எதிர்த்தார்கள். அப்படியும் நிர்வாகிகள் ஒரு நாடகம் நடத்தி அவரைக் கட்சித் தலைவியாக்கினார்கள். அவரை ஆட்சித் தலைவி யாக்க முயன்றபோது அவர் தொண்டர்களின் எதிர்ப்புடன் மக்களின் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியிருந்தது. அவர் முதல்வராவதற்கு  கவர்னர் முட்டுக்கட்டை போட்டார். காரணம், சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் விரைவில் தீர்ப்பு வரவிருந்தது. தெரிந்தே ஒரு தவறைச் செய்ய கவர்னருக்கு மனம் வரவில்லை.

 காத்திருந்தார். புனித ஜார்ஜ் கோட்டைக்குப் பதில் பரப்பன அக்ரஹார சிறை சசிகலாவை அழைத்தது. அப்படியும் சசிகலா விடவில்லை. பினாமி ஆட்சிக்கு ஏற்பாடு செய்து விட்டே சிறைக்குச் சென்றார். வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப் பட்ட ஆடு மாடுகள்கூட பட்டி திறந்தால் திசைக்கு ஒன்றாக ஓடிவிடும். சசிகலாவின் அடிமைகள் தம்மை மேய்ப்பதற்காக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி இவர்களை மூக்கணாங்கயிற்றையோ, அரணாக்கயிற்றையோ பிடித்து இழுத்து... அடுத்த பட்டியான சட்டமன்றத்திற்கு ஓட்டிச் சென்றார்.

இந்த அமளியில் ஸ்டாலினின் சட்டை கிழிந் தது என்றார்கள். கிழிந்தது சட்டை அல்ல சட்டம். சட்டசபையில் எதிர்க்கட்சிகள் "ரகசிய வாக்கெடுப்பு' என்று கேட்ட உடனேயே சபாநாயகர் அதற்கு ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். "இதய தெய்வம் அம்மா' என்றெல்லாம் ஆளும் கட்சிக்காரராகப் பேசுபவர், நடுநிலை சபாநாயகராக இருக்க முடியாது. "இது எங்கள் கட்சி மன்றம்' என்பதை வெளிப்படையாக தனபாலர்கள் மூலம் உணர்த்தினார் தனபால்.

சட்ட மன்றத்தில் உறுப்பினர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை கவர்னர் சொல்வதில் சில சங்கடங்கள் உண்டு. ஆனாலும் அவரே குடியரசுத் தலைவர் சார்பாக ஜனநாயகத் தின் காப்பாளர் என்பதனால் எடப்பாடி பழனிச் சாமி பட்டியலைக் கொடுத்த உடன் ஒரு நிபந்தனை விதித்திருக்க முடியும். அதாவது "எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக இல்லை என்று அறிகிறேன். அதற்கு ஆதாரம் இருக்கிறது...

உங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுக்கிறேன். இன்றே எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளுக்குச் சென்றுவிட்டு அவர்களுக் கான சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்குத் திரும்பி, அங்கிருந்து சட்டமன்றம் செல்லட்டும். அதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு உங்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறேன்.

நம்பிக்கை வாக் கெடுப்பையும் ரகசிய வாக்குமூலம் நடத்துங்கள். இன்றைய சூழ்நிலையில் அது தான் சரி' என்று கறாராகச் சொல்லியிருந்தால், நிலைமை மாறி யிருக்கும். கட்சியின் அடிமைகளை ஆட்சியின் அடிமைகளாகவும் சசிகலா மாற்றியிருக்க முடியாது.

இதெல்லாம் நடந்திருக்க வேண்டும்... ஆனால் நடக்கவில்லை. சரி, இப்போது என்ன செய்வது? நீதிமன்றம் செல்லலாம். வழக்கு சாதகமாகவோ, விரைவாகவோ நடக்கும் என்று சொல்ல முடியாது. பொதுமக்கள் கருத்தைத் திரட்டலாம். அதை இனிமேல் செய்து பயனில்லை. சட்டமன்றம் கூடுவதற்கு முதல்நாள் பல தொகுதிகளில் நடைபெற்ற பேரணியில் மக்கள் தங்கள் எம்.எல்.ஏ.க்கள் மீதான வெறுப்பை செருப்பாலும், விளக்கு மாற்றாலும், உருட்டுக் கட்டையாலும் காண்பித்தார்கள். பிரமுகர்களுக்கு பதில் பிம்பங்கள் அந்த மரியாதையைப் பெற்றன. ஆனாலும் மக்கள் யாரை விரட்டியடிக்க விரும்பினார்களோ அவர்கள்தானே ஆட்சியில் இருக்கிறார்கள்.

;அசாதாரணமான சந்தர்ப்பங்களில் மக்கள் பிரதிநிதிகளைத் திருப்பி அழைக்கும் சட்டம் தேவை என்று பேசப்பட்டது. அந்தச் சட்டத் திருத்தமும் இப்படிப்பட்ட மகான்களின் கையில் தான் இருக்கிறது; அவர்கள் கொள்ளிக்கட்டையால் தலையைச் சொறிந்துகொள்ள மாட்டார்கள். பதவிப் பறிப்புச் சட்டம் இருந்தால் இந்நேரம் மக்களே அ.இ.அ.தி.மு.க.  எம்.எல்.ஏ.க்களை அகற்றியிருப்பார் கள். அந்தச் சாதகம்  இல்லாத நிலையில் வாக் கெடுப்பு அராஜகம் பற்றி, குடியரசுத் தலைவரிடம் முறையிடுவது -வழக்காடுவது எல்லாம் வெறும் சடங்குகள்.

இதனால் நேரம் விரயமாகுமேயொழிய உருப்படியாக எதுவும் நடக்காது. ஆனால் வெகு விரைவில் சட்டசபை கலைக்கப்பட ஒரு வழி இருக் கிறது. தி.மு.க.-காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அராஜகத் தை எதிர்ப்பதாகக் காரணம் காட்டி பதவி விலக வேண்டும். ஒட்டுமொத்த ராஜினாமாவுக்கு வலு உண்டு. வேறு வழிகளில் வெற்றிபெற காலதாமதம் ஆகும். இதற்கோ உடனடியாகப் பலன் கிடைக்கும். இதனால் இவர்கள் சட்டசபையில் மேலும் அவ மானப்பட வேண்டாம். ஆளும்கட்சியால் மக்களைக் காப்பாற்ற முடியாது என்கிற நிலையில்,  எதிர்க்கட்சி கள் அதைச் செய்யலாம்; செய்ய வேண்டும். இது ஸ்டாலினின் உடனடி முடிவிலும் முனைவிலும் இருக்கிறது.

மன்னர்கள் காலத்தில் இருந்ததாகக் கேள்விப்பட்ட கொடுங் கோல் ஆட்சியை, ஜனநாயக காலத்தில் தமிழ்நாடு அனுபவிப்பது ஒரு அரசியல் அவலம்.  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக