வியாழன், 16 பிப்ரவரி, 2017

கூவத்தூர் ! சபாரி ஆடை ரவுடிகள்.. போலீசிடமும் பேச பயத்தில் மறுத்த எம்.எல்.ஏக்கள் ..

மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணன் காவல்துறை இயக்குனரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். கூவத்தூரில் உள்ள தனியார் ரெசார்ட்டில், தான் உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தாகவும், தான் மாறு வேடத்தில் தப்பி வந்ததாகவும், அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் பலர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவானவர்களாக உள்ளனர் என்று சரவணன் தெரிவித்திருந்தார். சரவணன் அளித்த புகாரின்பேரில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி உள்பட 4 பேர் மீது கூவத்தூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை எஸ்.பி. முத்தரசி, வடக்குமண்டல ஐஜி செந்தாமரைக் கண்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்த ரிசார்ட்டுக்குள் சென்றனர். வெளியே வந்த போலீசாரிடம், உள்ளே விசாரணை நடத்தினீர்களா என்றதற்கு, தங்களோட சொந்தப் பணத்தில் தங்கியிருப்பதாகவும், கட்சியில் சில பிரச்சனைகள் இருப்பதால் தங்கியிருக்கிறோம். தங்களது சொந்த விருப்த்தில் பேர்லதான் தங்கியிருக்கோம் என்று எம்எல்ஏக்கள் தெரிவிப்பதாக கூறினர்.
ரிசார்ட்டுக்குள் எத்தனை எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு, அது தெரியல சார். நாங்க என்னல என தெரிவித்தனர்.
உள்ளே இருப்பவர்கள் இத்தனை பேர் இருக்கிறோம் என்று சொன்னாங்களா என்றதற்கு, சொல்லவில்லை என்றனர். எம்.எல்.ஏ. சரவணன் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்றதற்கு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். நாம் விசாரித்தபோது, ரிசார்ட்டுக்குள் விசாரிக்க வந்த போலீசாரிடம் எந்த ஒரு எம்எல்ஏவும் சுதந்திரமாக பேச முடியவில்லை. நேற்று திடீரென காணாமல் போன சபாரி டிரஸ் போட்ட ரவுடிகள், இன்று வந்துவிட்டனர். அவர்களை வெளியே அனுப்பினால்தான் பேச முடியும் என தெரிவித்தாக கூறினர். அரவிந்த் படங்கள்: செண்பகபாண்டியன்  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக