சனி, 4 பிப்ரவரி, 2017

முதல்வர் ஆகிறாரா சசிகலா? சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க ஒப்புதல் கடிதம் பெறுவதற்காகவே கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா கடந்த டிசம்பர் 31-ம் தேதி பொறுப்பேற்றார். அப்போதே கட்சியும், ஆட்சியும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, சசிகலாவை முதல்வராக்கும் முயற்சி நடந்தது. அமைச்சர்கள் சிலரே அதற்கு அடித்தளம் இட்டனர். ஆனால், என்ன காரணத்தாலோ அதற்கான வேலைகள் அதோடு நின்றுபோனது. சட்டப் பேரவையில்கூட ஆளுங்கட்சியின் பொதுச் செயலாளரான சசிகலாவை கட்சி உறுப்பினர்கள் புகழ்ந்தார்களே தவிர, வேறு எதையும் வலியுறுத்தவில்லை. அதன்பின் அதிமுக இலக்கிய அணியினர் நடத்திய ஆலோ சனைக் கூட்டத்திலும் இதுதொடர் பாக எந்த தீர்மானமும் நிறை வேற்றப்படவில்லை.
இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை (நாளை) மாலை நடப்ப தாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவைக் கூட்டத்தொட ரின்போது, முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நெருக்கடி ஏற்படும் சூழல் உருவானால், சக்தி அளிப்பதாக திமுகவின் துரைமுருகன் பேசியது, சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டி ருக்கிறது. அதிமுக தலைமையின் இந்த திடீர் நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊருக்குச் செல்ல இருந்த எம்எல்ஏக்களை சென்னையில் தங்கியிருக்குமாறு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. ஊருக்குச் சென்றவர்களை உடனடியாக சென்னைக்கு வருமாறும் கூறப்பட்டுள்ளது. எம்எல்ஏக்களிடம் ஒப்புதல் கடிதம் பெற்று, விரைவில் சசிகலா முதல்வராக பொறுப்பேற்கவே இந்த நடவடிக்கை என கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆனால், தொகுதிகளில் மக்கள் பிரச்சினைகள் தொடர்பான விவரங்கள் பெறவே தாங்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகிகளும் அழைக்கப் பட்டிருப்பதாகவும் எம்எல்ஏக்கள் கூறுகின்றனர். tamilthehindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக